தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கர்ணன். பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த மாரி செல்வராஜின் அடுத்த திரைப்படத்திற்காக தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருந்தார்கள். அவர்களுக்குத் தீனி போடும் விதமாக அமைந்த அறிவிப்பு தான் தனுஷுடன் மாரிசெல்வராஜ் இணையும் அறிவிப்பு. 

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கர்ணன் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.ஒவ்வொரு FRAME-லும் இருக்கும் காட்சி அமைப்பும் மாரி செல்வராஜின் உழைப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். 

கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களும் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. தேனிசைத் தென்றல் தேவாவின் குரலில் வெளிவந்த மஞ்சனத்தி புராணம் பாடல் மனதை நெகிழ வைத்தது. இந்த திரைப்படத்தின்  துவக்கப் பாடலாக இருக்கும் “கண்டா வர சொல்லுங்க” பாடல் வெளியான நாளிலிருந்து இன்று வரை யூட்யூபில் வைரலாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு அந்த பாடலின் வீடியோ வெளியாகி அதுவும்   ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது  மகளுடன் வீடியோ காலில் பேசும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் மாரி செல்வராஜின் மகள் “கண்ட வர சொல்லுங்க” பாடலை பாடுகிறார். ஒரு வரியை மாரி செல்வராஜ்  பாட அடுத்த வரியை மாரி செல்வராஜ்-ன் மகள் பாடுகிறார். அதில்  “கண்ட வர சொல்லுங்க” என மாரி செல்வராஜ் பாட “அப்பாவை கையோட கூட்டி வாருங்க” என மகள் பாடுவது  மிகவும் ரசிக்கும் படியாக அமைந்திருக்கிறது. தற்பொழுது அந்த வீடியோ  சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி வைரலாகி வருகிறது.