தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.இவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகி கலவையான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து இவர் வம்சி இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இவர் நடிக்கவுள்ள அடுத்த படங்களை இயக்கவுள்ளதாக தற்போதே சில பெயர்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றன.இதில் மாஸ்டர்,விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜிற்கு தளபதி 67 படத்தினை அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மாஸ்டர் படத்தின் மிக பெரிய வெற்றியை அடுத்து இருவரும் மீண்டும் இணைவது கிட்டத்தட்ட உறுதி ஆகி விட்டது.இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.அடுத்த பட ஸ்கிரிப்ட் வேலைகளுக்காக சமூகவலைத்தளங்களில் இருந்து பிரேக் எடுப்பதாக லோகேஷ் தெரிவித்திருந்தார்.

அடுத்த படம் விஜயுடன் தான் என்பதை உறுதிசெய்வது போல சில பல நிகழ்வுகளில் லோகேஷ் ஹிண்ட் கொடுத்துள்ளார்.இந்த படத்தில் இயக்குனர் கெளதம் மேனன் நடிக்கிறார் என்று சில தகவல்கள் பரவி வந்தன.தற்போது நமது கலாட்டா பிளஸ் சேனலுக்கு கெளதம் மேனன் அளித்துள்ள பேட்டியில் இந்த படத்தில் நடிப்பதை உறுதிசெய்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தளத்தில் இருந்து கெளதம் மேனன் கலாட்டா பிளஸ் தலைமை ஆசிரியர் பரத்வாஜ் ரங்கனுடனான சிறப்பு நேர்காணலில் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து வந்தார்.

லோகேஷ் அடுத்த படத்தில் நடிக்க அழைப்பு விடுத்துள்ளார் மீண்டும் சில வாரங்களில் தொடர்பு கொள்கிறேன் என லோகேஷ் கூறியுள்ளார் என்று GVM தெரிவித்துள்ளார்.பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .லோகேஷ் அடுத்து இயக்க இருக்கும் படம் தளபதி 67 தான் எனவே இந்த படத்தில் கெளதம் மேனன் நடித்தால் சூப்பராக இருக்கும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

#GVM in #Thalapathy67 ?😉@menongautham @actorvijay @Dir_Lokesh @baradwajrangan #ThalapathyVijay #GauthamMenon #LokeshKanagaraj #GalattaPlus #GalattaExclusive pic.twitter.com/lmV3CuIaOr

— Galatta Media (@galattadotcom) September 7, 2022