‘தி கேரளா ஸ்டோரி’ ஒடிடி ரிலிஸ் எப்போது? படக்குழு கொடுத்த அப்டேட்.. – வைரலாகும் பதிவு உள்ளே..

தி கேரளா ஸ்டோரி ஒடிடி ரிலீஸ் குறித்து அட ஷர்மா பதிவு - adah sharma about the kerala story ott release | Galatta

இந்து பெண்களை ஏமாற்றி இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி அவர்களை தீவிரவாத அமைப்பில் சேர்ப்பது போன்ற கதை கொண்டு வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. படத்தின் முன்னோட்டம் வெளியான நாளிலிருந்து படத்திற்கான எதிர்ப்பு நாடு முழுவதும் எழுந்தது. இஸ்லாமிய மதத்தினரை இழிவாக சித்தரிப்பது போன்று திரைப்படம் அமைந்துள்ளது என ஆர்பாட்டமும் நடைபெற்றது. இருப்பினும் சர்ச்சைகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த மே மாதம் 5ம் தேதி நாடு முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் அதா சர்மா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன்  சித்தி இட்னானி, யோகிதா பிஹாணி, சோனியா பலானி  உள்ளிட்ட பலர் நடிதிருப்பார். தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழகத்தில் இந்த படத்திற்கு தொடர் எதிர்ப்பு அதிகரிக்க, மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் தானாக முன்வந்து தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்தன. மேற்கு வங்கத்திலும் இப்படத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. இருந்தும் வட மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு ஆதரவு பெருக அதன்படி உலகளவில் இப்படம்  ரூ 240 கோடிக்கு மேல் வசூலித்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 2 மாதம் நிறைவடைந்த நிலையில் இப்படத்தின் ஒடிடி ரிலீஸ் குறித்து அறிவிப்பினை படக்குழு தரப்பில் அறிவிக்கப் படவில்லை. மேலும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வாங்க ஒடிடி தளங்கள் தயங்குவதாக சொல்லப் படுகிறது.

முன்னதாக ஒரு பேட்டியில்  தி கேரளா ஸ்டோரி இயக்குனர் சுதிப்டோ சென், "எங்களுக்கு சரியான ஓடிடி தளம் இன்னும் கிடைக்கவில்லை. அதற்காக காத்திருக்கிறோம்.  எங்களின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பல பிரிவினரை எரிச்சலடையச் செய்துள்ளது. அதனால் எங்களைத் தண்டிக்கத் திரையுலகம் சதி செய்திருப்பதாகத் தெரிகிறது.  இதற்காகவே ஒரு குழு வேலை செய்கிறார்கள் என எண்ணுகிறோம்" என ஒரு பேட்டியில் புலம்பியுள்ளார்.

இதை தொடர்ந்து இணையத்தில் ரசிகர்கள் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஒடிடி ரிலீஸ் எப்போது என்று தொடர் கேள்விகளை கேட்டு வந்துள்ளனர். இதையடுத்து படத்தின் நாயகி அடா ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில்

Rukooo !!! Panic mat karo !!
Abhi tak theatres mein chal Rahi hai #TheKeralaStory ... Now thode din aur let it be in theatres ? And then very soon apke nazdeeki cinema Ghar se aapke cell phone Tak aa jaegi. See you soon in your homes...don’t worry (unless cupboard saaf nahi hai… pic.twitter.com/iPZ1TlamON

— Adah Sharma (@adah_sharma) June 27, 2023

“நிறுத்துங்க.. யாரும் பயப்பட வேண்டாம்.. தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கின்றது. இன்னும் கொஞ்சம் நாள் ஓடட்டுமே? கூடிய விரைவில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையரங்குகளில் இருந்து உங்கள் வீட்டில் உங்கள் கைப்பேசிக்கு வந்து விடும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.  இதையடுத்து ரசிகர்கள் அடா ஷர்மா பதிவினை வைரலாக்கி வருகின்றனர். படக்குழுவின் தகவலின் படி விரைவில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஒடிடியில் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

“அந்த ஆசை இந்த படத்தோட செத்துடுச்சு..” மாமன்னன் படம் பார்த்த பின் உதயநிதி ஸ்டாலினின் அட்டகாசமான பதில்..! – வைரலாகும் வீடியோ உள்ளே..
சினிமா

“அந்த ஆசை இந்த படத்தோட செத்துடுச்சு..” மாமன்னன் படம் பார்த்த பின் உதயநிதி ஸ்டாலினின் அட்டகாசமான பதில்..! – வைரலாகும் வீடியோ உள்ளே..

‘ஸ்குவிட் கேம்’ பாணியில் 2K கிட்ஸ்களை விளாசிய லொள்ளு சபா குழுவினர்.. - அதகள கமெடிகளுடன் வைரலாகும் வீடியோ..
சினிமா

‘ஸ்குவிட் கேம்’ பாணியில் 2K கிட்ஸ்களை விளாசிய லொள்ளு சபா குழுவினர்.. - அதகள கமெடிகளுடன் வைரலாகும் வீடியோ..

மாமன்னன் படம் பார்த்து மாரி செல்வராஜை கட்டித் தழுவி கொண்டாடிய முதல்வர் முக ஸ்டாலின்.. – வைரலாகும் பதிவு..
சினிமா

மாமன்னன் படம் பார்த்து மாரி செல்வராஜை கட்டித் தழுவி கொண்டாடிய முதல்வர் முக ஸ்டாலின்.. – வைரலாகும் பதிவு..