“உண்மையை கேட்க ஏன் சங்கடபடுறோம்..” ‘மாமன்னன்’ படம் குறித்து நடிகை கீதா கைலாசம்.. - சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ உள்ளே..

மாமன்னன் படம் குறித்து நடிகை கீதா கைலாசம் பகிர்ந்த தகவல் - Actress geetha kailasam about mari selvaraj | Galatta

பரியேரும் பெருமாள், கர்ணன் படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக உருவாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின். கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகியுள்ள மாமன்னன் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் தமிழகத்தில் மட்டும் சுமார் 600 திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. திரைபிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் மற்றும் ரசிகர்கள் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களில் நடித்து கவன பெற்ற நடிகையும் மாமன்னன் படத்தில் வடிவேலுவின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்தவருமான நடிகை கீதா கைலசம் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு மாமன்னன் படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் மாரி செல்வராஜ் படங்களில் கதைகளை விமர்சிப்பது குறித்து கேட்கையில்,

"இது என்னிக்கோ நடந்த கதைகள் என்று சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும். இன்னிக்கும் அது நடந்துட்டு தான் இருக்கும். மாரி செல்வராஜை எடுத்து கொண்டால் உண்மை சம்பவத்தை தான் படமாக எடுக்கிறார். அந்த உண்மையா நடந்த வலி எப்படி தீரும்.  அந்த கதைகளை சொன்னா அந்த வலி ஆறிடுமா? இருந்தும் கதைகளை சொல்லாமல் இருக்க முடியாது. எதோ ஒரு புனைவு கதையை ஆண்டுதொற்று படித்து வருகிறோம். ஒரு உண்மை கதையை பார்க்குறதுக்கு நாம் ஏன் இவ்ளோ சங்கடபடுறோம். அது ஒருத்தரோட வலியை பேசும் கதை . அதை நாம் தெரிஞ்சிக்கனும். அந்த விஷயம் இன்னுப் நடந்துட்டு தான் இருக்கு.." என்றார்.

மேலும் தொடர்ந்து நடிகை கீதா கைலாசாம் அவரிடம் பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் உடன் வேலை பார்த்த அனுபவத்தில் இருவருக்கும் இருக்கும் வேறுபாடுகள் என்ன என்ற கேள்விக்கு. "ரஞ்சித் எப்படினா ஒரு முறை கையில் கதை வசனம் கொடுத்துட்டா அதுல பெருசா மாறுதல் செய்ய மாட்டார்.  ஒரு மாசம் முன்னாடி கொடுத்த அதே கதை தான் இப்பவும் இருக்கும் சின்ன சின்ன அடித்தல் திருத்தல் தான் சின்னதா இருக்கும். மாரி செல்வராஜ் எப்படினா படப்பிடிப்பு தளத்திலே கதையில் மாறுதல் செய்யக் கூடிய இயக்குனர். நேற்று இரவு எதாவது காட்சி யோசிச்சா நாளைக்கு காலையில அந்த காட்சி மாறிருக்கும்." என்றார் நடிகை கீதா கைலாசம்.

மேலும் மாமன்னன் படம் குறித்தும் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்தும் நடிகை கீதா கைலாசம் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு நேர்காணலில் பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..

மாமன்னன் முதல் குட் நைட் வரை.. இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஒடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் – அட்டகாசமான பட்டியல் உள்ளே..
சினிமா ஸ்பெஷல்ஸ்

மாமன்னன் முதல் குட் நைட் வரை.. இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஒடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் – அட்டகாசமான பட்டியல் உள்ளே..

“அந்த ஆசை இந்த படத்தோட செத்துடுச்சு..” மாமன்னன் படம் பார்த்த பின் உதயநிதி ஸ்டாலினின் அட்டகாசமான பதில்..! – வைரலாகும் வீடியோ உள்ளே..
சினிமா

“அந்த ஆசை இந்த படத்தோட செத்துடுச்சு..” மாமன்னன் படம் பார்த்த பின் உதயநிதி ஸ்டாலினின் அட்டகாசமான பதில்..! – வைரலாகும் வீடியோ உள்ளே..

‘ஸ்குவிட் கேம்’ பாணியில் 2K கிட்ஸ்களை விளாசிய லொள்ளு சபா குழுவினர்.. - அதகள கமெடிகளுடன் வைரலாகும் வீடியோ..
சினிமா

‘ஸ்குவிட் கேம்’ பாணியில் 2K கிட்ஸ்களை விளாசிய லொள்ளு சபா குழுவினர்.. - அதகள கமெடிகளுடன் வைரலாகும் வீடியோ..