தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக அக்னிசிறகுகள், பார்டர், பாக்ஸர் மற்றும் சீனம் ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளிவர தயாராகி வருகின்றனர். முன்னதாக முன்னணி கமர்ஷியல் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை திரைப்படம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற யானை திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே அருண்விஜய் முன்பு நடித்த குற்றம் 23 மற்றும் பார்டர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்த ஏவிஎம் நிறுவனம் தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அருண் விஜயுடன் இணைந்து வாணிபோஜன் மற்றும் ஐஸ்வர்யா மேனன் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸுக்கு ராஜசேகர் ஒளிப்பதிவில்,V.J.சாபு ஜோசஃப் படத்தொகுப்பு செய்ய, விகாஸ் படிஸா இசையமைத்துள்ளார். 

தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸ் வருகிற ஆகஸ்ட் 19-ம் தேதி சோனி லைவ் தளத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அருண் விஜயின்  தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸின் விறுவிறுப்பான ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸ் ட்ரைலர் இதோ…