ஷாருக்கான் இந்திய சினிமாவை  எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தொலைக்காட்சி மூலமாகத் திரை முன்பு தோன்றிய அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, பாலிவுட்டில் முன்னணி நடிகராக அவதரித்தார்.உலகளவில் ரசிகர்களைத் தனது நடிப்பால் ஈர்த்து, பில்லியன் கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் கொண்ட ஒரே நடிகரென்ற பெருமையை பெற்றவர் இவர்.

அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் படத்தில் ஷாருக் கான் ஹீரோவாக நடித்து வருகிறார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.நயன்தாரா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.பல இடங்களில் நடைபெற்று வரும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்த படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் சிறப்பு தோற்றத்தில் வருகிறார் என்ற தகவல் வெளியாகி வந்தது.நேற்று விஜய் மற்றும் ஷாருக் கான் இணைந்து இருப்பது போல ஒரு புகைப்படம் வெளியாகி செம வைரலாகி வந்தது.இது எடிட் என்பது பின்னர் தெரியவந்தது.தற்போது அந்த புகைப்படம் போலி தான் இருவரின் சந்திப்பும் இன்னும் நடைபெறவில்லை என விஜயின் மேலாளர் ரியாஸ் ட்விட்டரில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தியாவின் முக்கிய முன்னணி நடிகர்கள் இருவர் இணைந்து நடித்தால் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும்.இந்த படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் வந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இன்னும் விஜய் இந்த படத்தில் நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.