தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள இவர் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் சில நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.நெல்சன் இயக்கத்தில் இவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

விஜய்க்கு ஒரு மகன் இருப்பதும் அவர் கனடாவில் சினிமா சார்ந்த படிப்பை படித்து வருவதும் அனைவரும் அறிந்ததே.சிறு வயதில் தந்தையுடன் சில விழாக்களில் மட்டும் கலந்துகொண்டு வந்தார் சஞ்சய்.வேட்டைக்காரன் படத்தில் விஜயுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார் சஞ்சய்.

இவர் தனது நண்பர்களுடன் இணைந்து எடுத்த குறும்படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இவரது பெயரில் சிலர் போலி கணக்குகள் மூலம் சமூகவலைத்தளங்களில் குழப்பங்களை ஏற்படுத்தி வந்தனர்.இது தொடர்ந்து கொண்டே இருக்க விஜய் தரப்பில் இருந்து ஒரு விளக்கம் தற்போது அளிக்கப்பட்டுள்ளது.

விஜயின் மகன் சஞ்சய் எந்த சமூகவலைத்தளதிலும் இல்லை என விஜயின் மேனேஜர் ரியாஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.போலி கணக்குகளை தவறாக யாரும் பின்தொடர்ந்து அவர்களை ஆதரிக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.