தெலுங்கில் பேச சொன்ன ரசிகர்கள்.. மேடையில் மாஸ் காட்டிய தனுஷ்.. – வாத்தி டிரைலர் வெளியீட்டு விழா வீடியோ வைரல்..

வாத்தி டிரைலர் வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசிய வீடியோ இதோ - Dhanush viral speech at vaathi trailer launch meet | Galatta

கல்வியை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் வாத்தி. இந்த திரைப்படத்தில் தனுஷ் ஆசிரியராக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கும் இப்படத்தினை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். மேலும்  சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் வாத்தி திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதில் தனுஷுடன் இணைந்து சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் வாத்தி திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று இணையத்தில் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.  வாத்தி மற்றும் அதன் தெலுங்கு மொழி வடிவ படமான ‘சார்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ரசிகர்களின் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா தேவதரா வம்சி மற்றும் சாய் சௌசன்யா மற்றும் திரைப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கர் மற்றும் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சம்யுக்தா கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய தனுஷ், தனக்கு தெலுங்கு புரிந்து கொள்ள முடியும். ஆனால் பேச வராது. அதனால் தமிழிலே பேசுகிறேன் என்று ரசிகர்கள் முன்னிலையில் பேச தொடங்கினார். “முன்பெல்லாம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என சினிமா இருந்தது. இப்போ எல்லோரும் எல்லா மொழி திரைப்படமும் பார்க்கின்றோம் அதனால் இப்போது எல்லாம் இந்தியன் சினிமா என்ற நிலையாக வந்துவிட்டது. தெலுங்கு ரசிகர்களாகிய நீங்களெல்லாம் தமிழ் படம் பார்க்கிறீர்கள். நாங்கள் தமிழ் படம் பார்க்கிறோம். இந்த மாற்றம் ரொம்ப அழகா இருக்கு.. இந்த படம் தமிழ், தெலுங்கு மொழி எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நடைபெறும் கதை. இரண்டு மொழி, இரண்டு கலாச்சாரம் கலந்து இருந்தது. அதை பார்க்கவே ரொம்ப அழகா இருந்தது. அந்த மாதிரி கதை அமைஞ்சதுக்கு ரொம்ப சந்தோஷபடுறேன்.” என்றார். இடையில் ரசிகர்கள் தெலுங்கில் பேச சொல்லி கேட்க “தனுஷ் எனக்கு தெலுங்கு தெரியாது. உங்களுக்கு தமிழ் புரிந்து கொள்ள முடியவில்லையா?  ஆங்கிலத்தில் பேசலமா?.. இதுவரை நான் பேசுனத நான் திரும்ப சொல்லனும்னு அவசியம் இல்ல ல..” என்று கேட்டு பின் ஆங்கிலத்தில் தொடர்ந்தார் தனுஷ். இந்த சம்பவம் ரசிகர்களை குதூகலப்படுத்தி மேடையில் ரசிகர்கள் ஆரவாரப்படுதினர். மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிகழ்வை தொடர்ந்து தனுஷை எதாவது வசனம் பேச சொல்லி கேட்க தனுஷ் வேலையில்லா பட்டாதாரி படத்தில் வரும் வசனத்தை பேசி மாஸ் காட்டினர். மேலும் கொலைவெறி பாடலை பாட சொல்லி ரசிகர்கள் கேட்டனர். 12 வருஷம் முன்னாடி வந்தது அது. நான் வாத்தி திரைப்படத்திலிருந்து பாடுகிறேன் என்று ‘வா வாத்தி’ பாடலை ரசிகர்களுடன் இணைந்து மேடையில் பாடினார்.இந்த டிரைலர் வெளியீட்டு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

பிரிந்த குடும்பங்களை இணைக்கும் கவினின் ‘டாடா’ திரைப்படம்.. நெகிழ்ச்சி சம்பவம்.. -  வைரலாகும் இயக்குனரின் பதிவு இதோ..
சினிமா

பிரிந்த குடும்பங்களை இணைக்கும் கவினின் ‘டாடா’ திரைப்படம்.. நெகிழ்ச்சி சம்பவம்.. - வைரலாகும் இயக்குனரின் பதிவு இதோ..

“நீங்க லைலா மஜ்னு வாழ்க்கைலாம் வாழ போறது இல்ல”.. பெண்கள் எதிர்காலம் குறித்த கேள்விக்கு செல்வராகவனின் அதிரடியான பதில்.. -  சுவாரஸ்யமான வீடியோ இதோ..
சினிமா

“நீங்க லைலா மஜ்னு வாழ்க்கைலாம் வாழ போறது இல்ல”.. பெண்கள் எதிர்காலம் குறித்த கேள்விக்கு செல்வராகவனின் அதிரடியான பதில்.. - சுவாரஸ்யமான வீடியோ இதோ..

Valentine's Day Special.. ரசிகர்களின் மனம் கவர்ந்த 14 தமிழ் சினிமா காதல் ஜோடிகள்..
சினிமா ஸ்பெஷல்ஸ்

Valentine's Day Special.. ரசிகர்களின் மனம் கவர்ந்த 14 தமிழ் சினிமா காதல் ஜோடிகள்..