இந்திய திரை உலகின் மிக முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கும் நடிகர் தனுஷ் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக டோலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்துள்ள தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் அட்லுரி இயக்கத்தில் தயாராகும் வாத்தி (SIR) படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். நானே வருவேன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைப்பெற்று வருகிறது. மேலும் ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் பட இயக்குனர்கள் ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள தி க்ரே மேன் திரைப்படம் விரைவில் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமிழ் திரையுலகின் முன்னணி இளம் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் மாறன். கடந்த மார்ச் 11-ம் தேதி நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசானது. தனுஷுடன் இணைந்து மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் மற்றும் இயக்குனர் அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள மாறன் திரைப்படத்திற்கு விவேக் ஆனந்த் சந்தோஷம் ஒளிப்பதிவில் பிரசன்னா.G.K படத்தொகுப்பு செய்ய ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் மாறன் படத்தில் இருந்து வீடியோ தற்போது வெளியானது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த  "அண்ணன தாலாட்டும்" பாடல் வீடியோ இதோ…