தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகனாகவும் முன்னணி நட்சத்திர நடிகராகவும் திகழும் அஜித் குமார் நடிப்பில் கடைசியாக ரிலீசான திரைப்படம் வலிமை. அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற வலிமை படத்தைத் தொடர்ந்து மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் #AK61 படத்தில் அஜீத் கதாநாயகனாக நடிக்கிறார்.

நேர்க்கொண்ட பார்வை & வலிமை திரைப்படங்களை தொடர்ந்து #AK61 திரைப்படத்தையும் இயக்குனர் H.வினோத் இயக்கவுள்ளதாகவும் வருகிற ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அஜித்குமாரின் #AK62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித்குமார் நடிக்கும் #AK62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக திரையரங்குகளில் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய வலிமை படம் சில தினங்களுக்கு முன்பு ZEE5 OTT தளத்திலும் வெளியானது.

இந்நிலையில் வலிமை திரைப்படத்தில் இடம்பெற்ற அம்மா பாடலின் வீடியோ தற்போது வெளியானது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதிய அம்மா பாடலை பாடகர் சிட் ஸ்ரீராம் பாடியிருந்தார். வலிமை படத்தின் எமோஷனலான அம்மா பாடல் பலருக்கும் ஃபேவரட் பாடலாக தொடர்ந்து ஒலித்து வருகிறது. ரசிகர்களின் விருப்பமான அம்மா பாடல் வீடியோ இதோ…