"கேப்டன் மில்லர்" ரிலீஸில் திடீர் மாற்றம்: 2024 பொங்கல் வெளியீடாக வரும் தனுஷின் மிரட்டலான ஆக்சன் ட்ரீட்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

தனுஷின் கேப்டன் மில்லர் படம் 2024 பொங்கல் வெளியீடாக ரிலீஸ்,dhanush in captain miller release postponed to 2024 pongal | Galatta

நடிகர் தனுஷின் அதிரடி ஆக்சன் அவதாரமாக வெளிவர இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ரிலீஸில் படக்குழுவினர் திடீர் மாற்றம் செய்துள்ளனர். முன்னதாக வருகிற டிசம்பர் 15ஆம் தேதி உலகம் எங்கும் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக கேப்டன் மில்லர் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வருகிற 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக கேப்டன் மில்லர் திரைப்படத்தை வெளியிட பட குழுவினர் முடிவு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஒருபுறம் இது தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும் பொங்கல் வெளியீடாக படம் வெளிவருவதால் கொண்டாட்டத்திற்கு குறைவு இருக்காது என ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கின்றனர். தனுஷின் கேப்டன் மில்லர் பட பொங்கல் வெளியீடு குறித்து படப்புகள் வெளியிட்ட அந்த அறிவிப்பு இதோ… 

 

Our #CAPTAINMILLER is all set for a grand Release this PONGAL / SANKRANTI 2024 😎#CaptainMillerFromPongal#CaptainMillerFromSankranti @dhanushkraja @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @gvprakash @priyankaamohan @SathyaJyothi pic.twitter.com/xE43r89EEQ

— Sathya Jyothi Films (@SathyaJyothi) November 8, 2023

இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகராகவும் விளங்கும் நடிகர் தனுஷ் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், ராக்கி மற்றும் சாணிக் காயிதம் என தனக்கென தனி பாணியில் மிரட்டலான ஆக்சன் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அதிரடியான படம் தான் கேப்டன் மில்லர். தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் சொன்னேன்பிலிக் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 


1930 -களில் நடைபெறும் கதைக் களத்தை கொண்ட பக்கா அதிரடி பீரியட் ஆக்சன் திரைப்படமாக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்யும் கேப்டன் மில்லர் திரைப் படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்து இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் விரைவில் நடைபெற இருக்கிறது. சமீபகாலமாக முன்னணி நட்சத்திர நாயகர்களின் இசை வெளியீட்டு விழாக்கள் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில், தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் அங்கு நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது. 


அதே பொங்கல் வெளியிடாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் மிக முக்கிய கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படமும் வெளிவர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  அதே போல் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அட்டகாசமான ஏலியன் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாகி நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருக்கும் அயலான் திரைப்படமும் 2024 பொங்கல் வெளியீடாக ரிலீசாக ரெடியாகி இருக்கிறது. மேலும் ஜெயம் ரவியின் சைரன், அருண் விஜயின் வணங்கான், இயக்குனர் சுந்தர்.சி யின் அரண்மனை 4 உள்ளிட்ட படங்களையும் பொங்கல் வெளியீடாக வெளியிட அந்தந்த படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.