இந்தியன் 3: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இந்தியன் 2 SEQUELஐ அறிவித்த உலகநாயகன் கமல்ஹாசன்... உற்சாகத்தில் ரசிகர்கள்! விவரம் உள்ளே

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இந்தியன் 3 படத்தை அறிவித்த உலகநாயகன் கமல்ஹாசன்,kamalhaasan announced indian 3 on his birthday | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இந்தியன் 2 திரைப்படத்திற்காக காத்திருக்கும் வேளையில் இந்தியன் 3 திரைப்படத்தின் அறிவிப்பை தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் அறிவித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி இருக்கிறார். கடந்த சில வாரங்களாகவே இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 3 திரைப்படமும் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. முன்னதாக இந்தியன் 2 திரைப்படத்தின் நீளம் காரணமாக அதனை இரண்டு பாகமாக வெளியிட பட குழு முடிவு செய்திருப்பதாகவும் அதற்கு கூடுதலாக சில காட்சிகள் இருப்பதால் அதற்காக பிரத்யேகமாக உலகநாயகன் கமல்ஹாசன் 40 நாட்கள் கால்ஷீட் வழங்கியிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை ஏதும் வெளிவரவில்லை. இந்த சூழலில் தற்போது இந்தியன் 3 திரைப்படத்தின் அறிவிப்பை கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார் 

தனது பிறந்த நாளான நவம்பர் 7ஆம் தேதி நேற்று தனது மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை உலக நாயகன் கமல்ஹாசன் சந்தித்திருந்தார். அந்த பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வின்போது இந்தியன் 3 திரைப்படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 திரைப்படங்கள் அரசியல் சார்ந்த தளத்தில் இருக்கும் என்றும் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இது குறித்த மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் ஷங்கர் உடன் 2வது முறையாக இணைந்திருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்த  பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வருகிற திரைப்படம் தான் இந்தியன் 2. கடந்த 1996 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக மீண்டும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். 

கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விக்ரம் படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திற்கும் ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியன் 2 திரைப்படத்தின் டீசர் வீடியோவாக வெளிவந்த இந்தியன் 2 AN INTRO ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டு உலகநாயகன் கமல்ஹாசன் டப்பிங் ஈடுபடும் வீடியோக்கள் வெளிவந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த கடந்த 2022 ஆண்டு வெளிவந்த விக்ரம் திரைப்படம் இமாலய வெற்றி பெற்றதாலும் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் படம் என்பதாலும் 2024 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கபடும் படங்களில் ஒன்றாக இந்தியன் 2 திரைப்படம் இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.