பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எஸ் ஏ ராஜ்கண்ணு காலமானார்.. பாரதிராஜா, ராதிகா உள்ளிட்ட பிரபலங்கள் உருக்கம்..

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எஸ் ஏ ராஜ்குமார் மறைவு - Producer SA rajkannu passes away | Galatta

தமிழ் திரையுலகில் இன்று காலத்தால் அழியாத திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் இன்றைய நவீன யுகத்திலும் இயக்குனர் ஜாம்பவனாக இருந்து வருபவர் இயக்குனர் பாரதி ராஜா. தமிழ் திரையுலகின் எளிய மக்களின் வாழ்வியலையும் உணர்வுகளையும் நேர்த்தியாக கொடுத்த பாரதி ராஜாவை ’16 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தவர் தயாரிப்பாளர் எஸ் ஏ ராஜ்கண்ணு. இன்றும் ரசிகர்களால் கொண்டாட்டப்பட்டு வரும் முக்கிய திரைப்படங்களை தயாரித்து திரையுலக வரலாற்றில் முக்கிய பங்கு வகிப்பவர் எஸ் ஏ ராஜ்கண்ணு. இவரது அம்மன் கிரியேஷன்ஸ் தயாரிப்பின் கீழ், கிழக்கே போகும் ரயில், கன்னிப் பருவத்திலே, பொண்ணு பிடிச்சிருக்கு, எங்க சின்ன ராசா, இது எங்கள் ராஜ்ஜியம், மகாநதி போன்ற முக்கிய திரைப்படங்களை தயாரித்தனர். இவரது தயாரிப்பின் கீழ் பல முன்னணி நடிகர்களின் திரைப்பயணம் திருப்பு முனையாக அமைந்தது, அதன்படி ரஜினிகாந்த், கமல் ஹாசன், ஸ்ரீதேவி, ராதிகா, கவுண்டமணி, பாக்யராஜ், வடிவுக்கரசி, ராஜேஷ் ஆகியோராவர்.

இந்நிலையில் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எஸ் ஏ ராஜ்கண்ணு உடல்நலக்குறைவினால் நேற்று காலமானார். இந்த செய்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சோக நிகழ்வு குறித்து இயக்குனர் பாரதி ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், "16 வயதினிலே திரைப்படத்தின் வாயிலாக என்னை இயக்குனராக அறிமுகம் செய்து, என் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற என் முதலாளி திரு. S.A.ராஜ்கண்ணு அவர்களின் மறைவு,பேரதிர்ச்சியும், வேதனையும், அளிக்கிறது. அவரின் மறைவு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல்” என்று உருக்கமான செய்தியை பகிர்ந்துள்ளார்.

 

"16 வயதினிலே"திரைப்படத்தின்
வாயிலாக என்னை இயக்குனராக
அறிமுகம் செய்து, என் வாழ்வில்
ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற
என் முதலாளி
திரு. S.A.ராஜ்கண்ணு அவர்களின்
மறைவு,பேரதிர்ச்சியும், வேதனையும், அளிக்கிறது.
அவரின் மறைவு எனக்கும்
என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல். pic.twitter.com/OGMSc2DnQv

— Bharathiraja (@offBharathiraja) July 11, 2023

அதை தொடர்ந்து நடிகை ராதிகாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கல் செய்தியை பகிர்ந்துள்ளார். அதில், " நான் அறிமுகமான கிழக்கே போகும் ரயில் படத்தின் தயாரிப்பாளர் எஸ.ஏ.ராஜ்கண்ணு என்னுடைய திரையுலக பயணத்தில் பெரும் பங்கு வகித்தவர். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.

 

#SARajkannu my first producer for my debut film #kizhakeypogumrail, who is a big part of my journey in films. Have great respect and wonderful memory of him always. Pray for his soul to rest in peace 🙏🙏 pic.twitter.com/DNgbfbhmQh

— Radikaa Sarathkumar (@realradikaa) July 12, 2023

இதையடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தயாரிப்பாளர் எஸ் ஏ ராஜ்கண்ணு மறைவிற்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

“எனக்கு நினைவு அஞ்சலி போஸ்டர் ஒட்டிருப்பாங்க..” அநீதி திரைப்பட மேடையில் உடைந்து பேசிய இயக்குனர் வசந்த பாலன் – முழு வீடியோ உள்ளே..
சினிமா

“எனக்கு நினைவு அஞ்சலி போஸ்டர் ஒட்டிருப்பாங்க..” அநீதி திரைப்பட மேடையில் உடைந்து பேசிய இயக்குனர் வசந்த பாலன் – முழு வீடியோ உள்ளே..

சியான் விக்ரமின் ஸ்டைலிஷ் ஆக்ஷன் திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’.. – ரிலீஸ், பாடல் குறித்த அப்டேட்டை பகிர்ந்த ஹாரிஸ் ஜெயராஜ்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..
சினிமா

சியான் விக்ரமின் ஸ்டைலிஷ் ஆக்ஷன் திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’.. – ரிலீஸ், பாடல் குறித்த அப்டேட்டை பகிர்ந்த ஹாரிஸ் ஜெயராஜ்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

கையில் ஜிகர்தண்டாவுடன் மதுரை மாநகரில் 'RRR' பட இயக்குனர் ராஜமௌலி.! -  வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

கையில் ஜிகர்தண்டாவுடன் மதுரை மாநகரில் 'RRR' பட இயக்குனர் ராஜமௌலி.! - வைரல் வீடியோ உள்ளே..