காதல் கோட்டை படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தவர் தேவயானி.தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார் தேவயானி.இயக்குனர் ராஜகுமாரனை இவர் காதலித்து கடந்த 20001-ல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து 2004-2005 வரை நடித்து வந்த தேவயானி , அதன் பின் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.2003-ல் சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் தேவயானி.ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்த இந்த தொடர் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

2003 முதல் 2009 வரை 1500க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பானது.இதனை தொடர்ந்து சில முன்னணி சேனல்களில் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வந்தார் தேவயானி.சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி கைவிடப்பட்ட ராசாத்தி தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்தார் தேவயானி.தற்போது இவர் நடிக்கும் புதிய சீரியல் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புது புது அர்த்தங்கள் தொடரில் தேவயானி முன்னணி வேடத்தில் நடிக்கவுள்ளார்.கோலங்கள் தொடரில் தேவயானிக்கு ஜோடியாக நடித்த அபிஷேக் இந்த தொடரில் நடிக்கிறார்.மராத்தியில் ஒளிபரப்பான Aggabai Sasubai என்ற தொடரின் தான் இந்த தொடர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இந்த தொடரை மாஸ்டர் பட இயக்குனர் சேவியர் பிரிட்டோ தனது எஸ்தெல் எண்டெர்டைன்மெண்ட்ஸ் மூலம் தயாரிக்கிறார்.இவர் ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நீதானே எந்தன் பொன்வசந்தம் தொடரை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

A post shared by Tamil Tellywood (@tamiltellywood)