தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்தவர் VJ மணிமேகலை. காமெடி கலந்த பேச்சால் தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் ஹுசைன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அசத்தி வருகிறார். 

சுடு தண்ணீர் காலில் கொட்டி காயமடைந்திருந்த அவர் அதிலிருந்து தேறி வந்துள்ள நிலையில் அவரை ஆட வைத்து ரிலாக்ஸ் செய்துள்ளார் மணிமேகலையின் கணவர். மிகவும் பாப்புலர் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அனைவரின் மனதை கவர்ந்த கன்டஸ்டண்ட்டாக வலம் வந்து கொண்டிருக்கும் மணிமேகலை இரண்டு வாரமாக அந்த நிகழ்ச்சியில் இல்லாததால் அவருடைய ரசிகர்கள் அவரை ரொம்பவே தேடிக் கொண்டிருக்கின்றனர். 

டைமிங்கில் காமெடி செய்து ஷிவாங்கியை பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இவரும் புகழும் செய்யும் சேட்டைக்கு அளவே கிடையாது. இதனை ரசிப்பதற்காகவே பலரும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். 

அவருடைய ரசிகர்களும் அவருடன் நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களும் ரொம்பவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .அதனால் தான் இவரை காணாது புகழ் கூட இவரைக் எப்ப வருவ செல்லம் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டிருந்தார். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்ட மணிமேகலை தனக்கு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

அவருடைய கணவருடன் நீண்ட தூரம் சென்று நடுரோட்டில் நின்றபடி குத்தாட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் .அதனை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் அவருக்காக கமெண்டுகளை போட்டுக்கொண்டிருக்கும்போது புகழும் சிவானியும் கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள். அதில் ஷிவாங்கி வாவ் கப்பல்ஸ் கோல் சீரியஸ்லி என போஸ்ட் போட்டிருக்கிறார் .

அதற்கு அடுத்ததாக புகழும் வா செல்லம் வா உன்னை இந்த மாதிரி பார்த்து மாதிரி பார்த்து எவ்வளவு நாளாச்சு என தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர்களின் கமெண்டுகளை பார்த்ததும் குஷியாகி போன இவர்களுடைய ரசிகர்களும் மணிமேகலைக்கு வாழ்த்துக்களையும் தங்களுடைய சந்தோசத்தையும் வெளிப்படுத்தி கமெண்ட்களை போட்டிருக்கிறார்கள்.