விஜய் டிவியின் வித்தியாசமான முயற்சியாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சியாக மாறியது குக் வித் கோமாளி.சமையல் நிகழ்ச்சியில் காமெடியன்களை சேர்த்து கலக்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் நிறைவடைந்து மூன்றாவது ஒளிபரப்பாகி வருகிறது.10 போட்டியாளர்கள் மற்றும் 10 கோமாளிகளுடன் இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு தொடர்கின்றனர்.கோமாளிகளாக மணிமேகலை,சிவாங்கி,சுனிதா மற்றும் பாலா உள்ளிட்டோர் உள்ளனர்.

இவர்களை தவிர சக்தி,குரேஷி,சூப்பர் சிங்கர் பரத் மற்றும் மூக்குத்தி முருகன் உள்ளிட்டோர் புதிய கோமாளிகளாக இணைத்துள்ளனர்.இந்த நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாகா ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.சில எலிமினேஷன்களை கடந்து புதிதாக வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக 2 குக்களுடன் விறுவிறுப்பாக இந்த நிகழ்ச்சி சென்று வருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சிறப்பிக்க அவ்வப்போது சில முக்கிய பிரபலங்கள் என்ட்ரி கொடுத்து அசத்துவர்.இந்த சீசனில் துல்கர் சல்மான் சிறப்பு விருந்தினராக வந்தார்.இதனை அடுத்து வரும் வாரத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ப்ரியங்கா மோகன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.இதுகுறித்த புதிய ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளனர்.அதில் கோமாளிகளுடன் சிவகார்த்திகேயன் நடனமாடுவது போன்ற ப்ரோமோ செம வைரலாகி வருகிறது.