தனக்கென தனி ஸ்டைலில் அழகான திரைப்படங்களை வழங்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் விக்னேஷ் சிவன்  இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். இதனையடுத்து நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான பாவக் கதைகள் ஆன்தாலஜி வெப் சீரிஸில் லவ் பண்ணா உட்ரனும் எபிசோடை இயக்கினார்.

அடுத்ததாக அஜித்குமார் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். லைகா புரோடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் #AK62 திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.முன்னதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் காத்து வாக்குல காதல். 

ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இளையதிலகம் பிரபு, கலா மாஸ்டர் மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட, வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. கலக்கலான அந்த ப்ரோமோ இதோ…