தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அடுத்ததாக இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள அயலான் படம் ரிலீசுக்கு ரெடி ஆகி வருகிறது.அயலான் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.இதனைஅடுத்து இவர் அனுதீப் இயக்கத்தில் SK 20,ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் SK 21 படங்களில் நடிக்கவுள்ளார்,இதில் SK 20 படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது.

டான் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.எஸ்.ஜே.சூர்யா,சமுத்திரக்கனி,சூரி,முனீஸ்காந்த்,காளி வெங்கட்,பாலா சரவணன்,RJ விஜய்,சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.பல இடங்களில் சிறப்பு காட்சிகள் நடைபெற்றன.சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நடைபெற்ற சிறப்பு காட்சியில் ரசிகர்களுடன் படத்தினை சிவகார்த்திகேயன் கண்டு மகிழ்ந்துள்ளார்.இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.