இந்திய திரை உலகின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் துல்கர் சல்மான் முதல்முறை ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் நடித்துள்ள கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸின் படப்பிடிப்பு விபத்தில் நிறைவடைந்த நிலையில் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கத்தில் த்ரில்லர் படமாக தயாராகி இருக்கும் CHUP-REVENGE OF THE ARTIST  திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்து தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளிவர உள்ள திரைப்படம் சீதா ராமம்.

இயக்குனர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் தயாராகும் சீதா ராமம் திரைப்படத்தில் துல்கர் சல்மான் ராணுவ வீரராக நடித்து வருகிறார். மேலும் ம்ரூனல் தாகூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் சுமந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் சீதா ராமன் படத்திற்கு P.S.வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். 

ஸ்வப்னா சினிமாஸ் தயாரிக்க, வைஜெயந்தி மூவிஸ் வழங்கும் சீதா ராமம் படத்தின் முதல் பாடலாக ஹே சீதா ஹே ராமா பாடல் சில தினங்களுக்கு முன் வெளியானது. பாடகர்கள் S.P.சரண் & சிந்தூரி பாடிய ரொமான்டிக்கான ஹே சீதா ஹே ராமா பாடலின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியானது. அந்த வீடியோ இதோ…