விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 2 வாரங்களைக் கடந்து பரபரப்பாக நகர்ந்து வருகிறது. முதல் வாரத்திலேயே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டைவிட்டு தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறியது ஏமாற்றத்தை அளித்தது.

தொடர்ந்து 2-வது வாரத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது. வார இறுதியில் நாமினேட் செய்யப்பட்டவர்களில் இருந்து நாடியா சாங் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நபராக எலிமினேட் செய்யப்பட்டார். இதனை அடுத்து இந்த வாரத்தின் தொடக்கத்தில் கேப்டன் தேர்வு நேற்று நடைபெற்றது. 

பிக் பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனாக சிபி தேர்வு செய்யப்பட்டார். அடுத்து நடைபெற்ற நாமினேஷனில் அபிஷேக், பாவனி, பிரியங்கா, ஐக்கி பெர்ரி, இசைவாணி, சின்னபொண்ணு, அபினய், அக்ஷரா மற்றும் தாமரை செல்வி ஆகியோர் எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் இன்று (அக்டோபர் 19)  பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் லக்சரி பட்ஜெட் டாஸ்க் ஆரம்பிக்கிறது.

இந்த லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் நாணயத்தை காப்பாற்றி வெற்றி பெறும் போட்டியாளர் இந்த வார எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்தால் அதிலிருந்து காப்பாற்றபடுவார். ஒருவேளை நாமினேட் செய்யப்படாத போட்டியாளர் வெற்றி பெரும் வாய்ப்பு இருப்பின், அவர் நாமினேட் செய்யப்பட்ட ஒரு போட்டியாளரை காப்பாற்ற முடியும்.

இந்நிலையில் சற்று முன் வெளியான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோவில் பிரியங்கா, நிரூப், அபிஷேக், ராஜு உள்ளிட்ட போட்டியாளர்கள் இணைந்து தாமரைச்செல்வியை காப்பாற்ற முயற்சி செய்கின்றனர். அந்த புதிய ப்ரோமோ வீடியோ இதோ…