பெற்ற மகளை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 42 வயதான முஹம்மது பாரூக் என்பவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். 

இவற்றுடன், திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சொந்த ஊர் திரும்பி தனது மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வந்தார்.

இப்படியான சூழலில் தான், இவரது மகளில் ஒருவருக்கு 15 வயதும், மற்றொரு மகளுக்கு 18 வயதும் நடந்துகொண்டிருந்தது. அதில் ஒருவர் பள்ளியிலும், மற்றொருவர் கல்லூரியிலும் படிதது வருகின்றனர். 

இப்படியான சூழலில் தான், கடந்த ஆண்டு இவரது மனைவி உயிரிழந்த நிலையில், தந்தையான 42 வயதான முஹம்மது பாரூக், தனது இரு மகள்களையும் வளர்த்து வந்தார்.

அதே நேரத்தில், பாரூக் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்திருக்கிறார். 

இந்த நிலையில், பாரூக்கின் 15 வயது மகள் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்றைய தினம் தனது தந்தை மீது அதிர்ச்சியூட்டும் புகார் ஒன்றை அளித்தார். 

அதன் படி, அந்த 15 வயது சிறுமியின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், கடும் அதிர்ச்சி அடைந்தனர். 

அந்த புகாரில், “கடந்த ஒரு வருடமாக எனது தந்தை தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார்” என்று, பகிரங்கமாக அந்த சிறுமி குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த புகாரை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றிய நிலையில், இது குறித்து காவல் ஆய்வாளர் மகேஷ்வரி வழக்குப் பதிவு செய்து முகமது பாருக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார். 

இதனிடையே, பெற்ற மகளையே தந்தை ஒருவர் கடந்த ஒரு வருட காலமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உன்ளது.