தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக விளங்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த திட்டம் இரண்டு (PLAN-B) மற்றும் பூமிகா ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இதனையடுத்து விஷ்ணு விஷால் உடன் மோகன்தாஸ் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் இணைந்து புதிய த்ரில்லர் படத்தில் நடித்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக ஒரு நாள் கூத்து மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்த மான்ஸ்டர் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து ஜித்தன் ரமேஷ் மற்றும் கிட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் ஒளிப்பதிவில், சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்ய இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானது. விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.