தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக விரைவில் திரைக்கு வரவுள்ள திரைப்படம் F.I.R. இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் உடன் இணைந்து மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் மற்றும் ரெபா மோனிகா ஜான் இணைந்து நடித்துள்ள F.I.R. படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனையடுத்து மீண்டும் ராட்சஷன் திரைப்படத்திற்குப் பிறகு விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்த சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக வெளிவருகிறது மோகன்தாஸ். இயக்குனர் முரளி கார்த்திக் எழுதி இயக்கியுள்ள மோகன்தாஸ் படத்திற்கு விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்ய சுந்தரமூர்த்தி.K.S. இசையமைத்துள்ளார்.

விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள மோகன்தாஸ் படத்தில் விஷால் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க,  பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் மோகன்தாஸ் திரைப்படத்தின் முக்கிய தகவலை விஷ்ணு விஷால் இன்று பகிர்ந்து கொண்டார். 

அந்த பதிவில் மோகன்தாஸ் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாகவும், வருகிற அக்டோபர் 20ஆம் தேதி மோகன்தாஸ் படத்தின் முக்கியமான  அறிவிப்பு மற்றும் செகண்ட் லுக் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார். மேலும் மோகன்தாஸ் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் மேக்கிங் வீடியோவையும் பகிர்ந்துள்ளார் அந்த வீடியோ இதோ…