தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர்களான விஜய் கார்த்திக் கண்ணன் யாமினி யக்ணமூர்த்தி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். முன்னதாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்து மெகா ஹிட்டான டாக்டர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகை அமலாபால் நடித்து வெளிவந்த ஆடை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த சிந்துபாத், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்து நடித்து விரைவில் வெளிவர உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல், இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளிவந்த சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட படங்களுக்கும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் யாமினி யக்ணமூர்த்தி இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சில்லுக்கருபட்டி படத்தில் இணைந்து ஒளிப்பதிவு செய்ததோடு, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் முதல்முறை நடிகராக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்த சாணிக் காயிதம் திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இன்று (மார்ச் 16ஆம் தேதி) சென்னையில் ஒளிப்பதிவாளர்களான விஜய் கார்த்திக் கண்ணன் மற்றும் யாமினி யக்ணமூர்த்தி அவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களின் திருமணத்திற்கு கலாட்டா குழுமம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இவர்களின் திருமணத்திற்கு தமிழ் திரை உலக பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.