சீயான் விக்ரம் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ள படம் மகான்.இந்த படம் கொரோனா சூழல் காரணமாக நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் பிப்ரவரி 10ஆம் வெளியாகியுள்ளது.கார்த்திக் சுப்பாராஜ் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.சிம்ரன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.பாபி சிம்ஹா,சனந்த்,முத்துக்குமார் என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

3 வருடங்கள் கழித்து விக்ரம் படம் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தினை திரையரங்குகளில் காண முடியவில்லை என சில ரசிகர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

பலரிடமும் பாராட்டுகளை பெற்று வரும் இந்த படத்தின் புதிய மேக்கிங் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.பல சுவாரசியமான காட்சிகள் எப்படி உருவாகின என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்