பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் நாளை பிப்ரவரி 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. மேற்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் நடித்துள்ள வலிமை படத்தை இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார்.

தயாரிப்பாளர் போனி கபூரின் பே பியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து வழங்க, காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படத்தில் அஜீத் குமாருடன் இணைந்து ஹுமா குரேஷி, சுமித்ரா, யோகிபாபு, செல்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க மிரட்டலான வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திக்கேயா நடித்துள்ளார். 

நீரவ்ஷா ஒளிப்பதிவில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக தயாராகியிருக்கும் வலிமை திரைப்படத்தில் திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளவலிமை திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ப்ரோமோ வீடியோக்கள் ஒவ்வொன்றும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வலிமையைத் திரைப்படத்திலிருந்து புதிய Jukebox வீடியோ தற்போது வெளியானது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வலிமை படத்தின் அனைத்து பாடல்கள் மற்றும் தீம் ஆகியவை இடம்பெற்றுள்ள இந்த வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த Jukebox இதோ…