இன்றைய இளைஞர்களின் மனம் கவர்ந்த இசைநாயகனாக அவதரித்துள்ளவர் அனிருத்.2011-ல் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த அனிருத் முதல் பாடலிலேயே உலகம் முழுவதும் ரீச் ஆகி விட்டார்.ஆல் சென்டரிலும் அடித்து நொறுக்கும் மாஸ் பாடல்கள் ஆனாலும் சரி,மனதை மயக்கும் மெலடி பாடல்கள் ஆனாலும் சரி ட்ரெண்டிங்கில் இருப்பது அனிருத்தின் பாடல்கள் தான்.

இன்ஸ்டன்ட் ஹிட் முதல் ஸ்லோ பாய்சன் முதல் பல சூப்பர்ஹிட் பாடல்களை அனிருத் கொடுத்துள்ளார்.கடந்த சில வருடங்களாக பெரிய ஹீரோக்களின் படங்கள் இவரது இசை இல்லாமல் வருவதில்லை.பல படங்களின் பின்னணி இசையில் பட்டையை கிளப்பிய அனிருத் ,அந்த படங்களின் பக்கபலமாக இருந்து படத்தின் மற்றுமொரு நாயகன் என்ற பெயரினை சம்பாதித்தார்.இவருக்கென அசைக்கமுடியாத ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

திரை தீ பிடிக்க இவரது தீம் பாடல்கள் இருக்க ரசிகர்களின் கரகோஷத்தால் அரங்கம் அதிரும்.மனதை மயக்கும் மெலடி பாடல்கள் , திரைப்படத்தில் வரும் காட்சிக்கு பக்கபலமாக இருக்கும் பின்னணி இசையமைக்க இருந்தாலும் சரி ட்ரெண்டில் இருப்பது அனிருத்தின் இசை தான்.

பொதுவாக படத்தின் ஆல்பத்தில் இடம்பெறாமல் சர்ப்ரைஸ் ஆக சில பாடல்களை சில படத்தில் இணைத்து ரசிகர்களுக்கு படக்குழுவினர் இன்ப அதிர்ச்சி தருவார்கள்.இது சில படங்களில் இருந்து வருவதை நாம் பார்க்க முடியும் ,  ஆனால் இதுபோன்ற பாடல்கள் அனிருத் படங்களில் தொடர்ந்து இடம்பெறுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

சில வருடங்களுக்கு முன் தொடங்கி நேற்று வெளியான திருச்சிற்றம்பலம் பட பாடல்கள் வரை அனைத்து சர்ப்ரைஸ் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்து வருகின்றன.இந்த ட்ரெண்ட்டில் வெளியான அனிருத் இசையமைத்த படங்களில் இடம்பெற்ற சில பாடல்களை தற்போது பார்க்கலாம்.

செல்வராகவன் இயக்கத்தில் இரண்டாம் உலகம் படத்தின் பின்னணி இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார் அனிருத்,அப்போது கதைக்கு தேவை பட்டதுபோல இரண்டு பாடல்களை கம்போஸ் செய்தார் ஆல்பத்தில் இடம்பெறாத பெண்ணே நான் என்ன சொல்ல மற்றும் இரவினில் ஒருவனை சந்தித்தேன் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.பெண்ணே நான் என்ன சொல்ல பாடல் ட்ரைலரில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் கிளைமாக்ஸ் நெருங்கும் வேளையில் வேஷங்களில் பொய்யில்லை என்ற எமோஷனல் பாடல் ஒன்றை சேர்த்திருப்பார் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

மீண்டும் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் தட்றோம் மிரட்டுறோம் என்ற சர்ப்ரைஸ் பாடலை படத்தில் சேர்த்திருப்பார்.படத்தின் காட்சியோடு வரும் இந்த பாடல் இன்று வரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

A post shared by ROCKSTAR ANIRUDH 🎶 (@anirudh.music.forever)

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கு அடுத்தடுத்து இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார் அனிருத்.பேட்ட படத்தில் சர்ப்ரைஸாக மரண மாஸ் மற்றும் ரஜினியின் சூப்பர்ஸ்டார் டைட்டில் மியூசிக் இணைந்து மரணமாஸ் பாடல் முடிவடையும் இடத்தில் வைத்திருப்பார் அனிருத்.அதேபோல தர்பார் படத்தில் வரும் கண்ணுல திமிரு பாடலில் அண்ணாமலை தீம் இணைத்து ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்திருப்பார் அனிருத்.

கத்தி படத்திற்கு பிறகு சில வருடங்கள் கழித்து மாஸ்டர் படத்தில் தளபதி விஜயுடன் மீண்டும் இணைந்தார் அனிருத்,இந்த படத்தில் விஜயின் ரிங்டோன் ஆக வரும் மாஸ்டர் தி ப்ளாஸ்டர் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.அத்துடன் படத்தின் சண்டைக்காட்சி ஒன்றில் வாத்தி கம்மிங் பாடலுடன் கில்லி படத்தின் கபடி பாடலை இணைத்து வாத்தி கபடி பாடல் மூலம் ரசிகர்களுக்கு சிறப்பான ஒரு விருந்தினை கொடுத்திருப்பார் அனிருத்.

மீண்டும் விஜயுடன் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் முதல் சண்டை காட்சியில் Big Bad Beast என்ற பாடலையும்,கிளைமாக்ஸ் காட்சியில் Cool as Cucumba பாடலையும் சர்ப்ரைஸ் ஆக வைத்து ஆச்சரியப்படுத்தி இருப்பார் அனிருத்.

விஜய்சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்து வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் டைட்டில் பாடல்,அழத் தோணுதே,கண்ணே கண்மணியே என மூன்று பாடல்களை கதைக்கு ஏற்றார் போல சேர்த்து அசத்தியிருப்பார் அனிருத்.

சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தில் உன்னை விடாதே என்ற ஊக்குவிக்கும் பாடலையும் , முதல் நாயகன் என்ற எமோஷனலான அப்பா பாடலையும் இணைத்து மீண்டும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் அனிருத்.

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் வரும் போர்க்கண்ட சிங்கம் பாடல் EDM வெர்ஷன் ஒன்றை படத்தில் வரும் சண்டைகாட்சியுடன் Add செய்திருப்பார் அனிருத்.இந்த வெர்ஷன் செமயா இருக்கே என ரசிகர்கள் பலரும் இந்த பாடலை கொண்டாடி வந்தனர்.

அதேபோல சமீபத்தில் வெளியான தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் கண்ணீர் சிந்த என்ற அப்பா பாடல் மற்றும் மயக்கமா கலக்கமா என்ற தனுஷ் பாடிய தேன்மொழி பாடலின் Extended வெர்ஷன் ஒன்றையும் ஆல்பத்தில் இடம்பெறாமல் படத்தில் சேர்த்திருப்பார் அனிருத்.மயக்கமா கலக்கமா பாடல் நேற்று வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

ஆல்பத்தில் இடம்பெறாவிட்டாலும் நேரடியாக தியேட்டரில் படத்துடன் சில பாடல்கள் வெளியானாலும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.பல இசையமைப்பாளர்கள் இந்த வகையில் சர்ப்ரைஸ் பாடல்கள் கொடுத்து வந்தாலும் ரசிகர்களின் Vibe அறிந்து அவ்வப்போது அனிருத் கொடுக்கும் இந்த சர்ப்ரைஸ் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி இடம் உண்டு.தொடர்ந்து இதுபோன்ற பல சர்ப்ரைஸ் பாடல்களை அனிருத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.