டாக்டர் படத்தில் இணைந்த புட்டபொம்மா பாடல் பிரபலம் ! விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | July 19, 2020 12:00 PM IST

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் அயலான் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தடைபட்டுள்ளது.
இதனை அடுத்து தனது நெருங்கிய நண்பரும் கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருமான நெல்சன் இயக்கத்தில் தயாராகி வரும் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
யோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.தெலுங்கில் கடந்த வருடம் நானி நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன்.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.
டாக்டர் படத்தில் இருந்து சில புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.இந்த புகைபடங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தன.இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய செல்லம்மா என்ற பாடல் கடந்த ஜூலை 16ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.சமூகவலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது இந்த பாடல்.இந்த பாடல் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
ரௌடி பேபி,புட்ட பொம்மா உள்ளிட்ட பாடல்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடன இயக்குனர் ஜானி.இவர் இந்த பாடலுக்கு நடனமைக்கவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனை அடுத்து ரசிகர்கள் உற்சாகமாக இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.இதற்கு முன் இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து காந்தகண்ணழகி பாடலில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது போல செல்லம்மா பாடலும் ஒரு புதிய சாதனையை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்
I'm all excited to choreograph this FUN-tastic single #Chellamma from #Doctor movie after the #lockdown 😇
Listen here 😍 https://t.co/D04IINWgZr
Thank you @Siva_Kartikeyan garu @anirudhofficial @Nelsondilpkumar @SKProdOffl @KalaiArasu_ @kjr_studios @priyankaamohan— Jani Master (@AlwaysJani) July 18, 2020
Superstar Mahesh Babu praises this is recent Tamil film
19/07/2020 11:41 AM
RED HOT: Prabhas 21 big reveal video | Nag Ashwin | BIG ANNOUNCEMENT
19/07/2020 11:02 AM
Director Gautham Menon reveals the full story of his next film - new video!
18/07/2020 07:31 PM
Peter Paul finally comes out and opens up - VIRAL Promo Video | Vanitha
18/07/2020 06:37 PM