தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திர நாயகனாகவும் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த மெகா ஹிட்டான திரைப்படம் பிகில். இயக்குனர் அட்லி இயக்கத்தில் 3வது முறையாக தளபதி விஜய் இணைந்து நடித்த திகில் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

மகளிர் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி வெளிவந்த திகில் திரைப்படத்தில் இடம் பெற்ற “சிங்கப் பெண்ணே” பாடல் பெண்களுக்கான கீதமாக ஒலித்தது. மகளிர் கால்பந்தாட்ட அணியாக இப்படத்தில் நடித்த பதினோரு பெண்களின் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை காயத்ரி ரெட்டி.

தொடர்ந்து நடிகர் கவின் மற்றும் அம்ரிதா இணைந்து நடித்த லிஃப்ட் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை காயத்ரி ரெட்டி, தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக உலக அளவில் மிகப்பிரம்மாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார்.

பிரபல மாடல் அழகியாகவும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாகவும் திகழும் காயத்ரி ரெட்டி தற்போது தனது திருமணத்தை உறுதி செய்துள்ளார். காயத்ரி ரெட்டிக்கு இன்று (மே 1ஆம் தேதி) நிச்சயதார்த்தம் நடைபெற ள்ள நிலையில் தனது வருங்கால கணவரோடு இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் இதோ…