தமிழ் சினிமாவின் பிரபல இளம் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அதர்வா நடிப்பில் அடுத்தடுத்து  குருதி ஆட்டம் அட்ரஸ் ட்ரிக்கர் ஒத்தைக்கு ஒத்த என வரிசையாக திரைப்படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. இந்த வரிசையில் தமிழ் சினிமாவின் பிரபல இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள திரைப்படம் நிறங்கள் மூன்று.

துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் கார்த்திக் நரேன் இதனையடுத்து இயக்கிய நரகாசூரன் திரைப்படம்  சில காரணங்களால் ரிலீஸில் தாமதம் ஏற்ப்பட்டதோடு நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருக்கிறது. தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த மாஃபியா திரைப்படம் கடந்த 2020ம் ஆண்டு ரிலீஸானது.

கடைசியாக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு நேரடியாக டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசான நிலையில், இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அடுத்த திரைப்படமாக தயாராகி வருகிறது நிறங்கள் மூன்று. நடிகர்கள் அதர்வா , சரத்குமார் மற்றும் ரஹ்மான் ஆகியோர் நிறங்கள் மூன்று படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் நிறங்கள் மூன்று படத்திற்கு டிஜோ டாமி ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் சாரம் படத்தொகுப்பு செய்ய, ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது நிறங்கள் மூன்று திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.