பிக்பாஸ் கேபி-க்கும் கொரானா
By Anand S | Galatta | May 06, 2021 16:06 PM IST
இந்தியாவில் கொரோனா வைரஸ்-ன் தீவிரம் உச்சத்தை தொட்டுள்ளது என்று சொல்லலாம். தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டிய நிலையில் தமிழகத்தில் மட்டும் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பல சினிமா பிரபலங்களும் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதும் அதில் சிலர் மீண்டு வருவதும் ஒரு சிலர் உயிரிழப்பதும் என தினசரி பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் பாண்டு கொடுத்ததால் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இந்நிலையில் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த கேப்ரியலாவுக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் வெளியான ஏழாம் வகுப்பு c' பிரிவு என்ற தொலைக்காட்சி தொடரின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கேப்ரியலா விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் .நடிகர் தனுஷின் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தின் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கச்சியாக அறிமுகமான கேப்ரியலா சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த அப்பா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.
நடிகை கேப்ரியலா விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் நான்கில் கலந்து கொண்டார். கொரனோ பரிசோதனை செய்து கொண்ட கேப்ரியலாவுக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொண்ட கேப்ரியலா சிறப்பாக விளையாடி 5 லட்ச ரூபாய் பரிசு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொண்ட கேப்ரியலா சிறப்பாக விளையாடி 5 லட்ச ரூபாய் பரிசு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது .
STR's Maanaadu dubbing begins; Venkat Prabhu's big new update for fans
06/05/2021 01:46 PM
Actor and comedian Pandu passes away due to COVID-19 complications at 74
06/05/2021 10:57 AM