விஜய் தொலைக்காட்சியின் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி. 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் மட்டுமே காண முடியும்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் தொடக்க விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற பிக்பாஸ் சீசன்களில் இருந்து போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கைவிட்ட வெற்றியை கைப்பற்ற முனைப்போடு களமிறங்கியுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 1-லிருந்து  சினேகன், சுஜா வருணி, ஜூலி, பிக் பாஸ் சீசன் 2-லிருந்து தாடி பாலாஜி, ஷாரிக், பிக் பாஸ் சீசன் 3-லிருந்து வனிதா விஜயகுமார், அபிராமி வெங்கடாச்சலம், பிக் பாஸ் சீசன் 4-லிருந்து அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்கரவர்த்தி & பிக் பாஸ் சீசன் 5-லிருந்து நிரூப்  நந்தகுமார், அபிநய், தாமரைச்செல்வி, சுருதி  ஆகியோர் ஹவுஸ் மேட்ஸ்களாக நுழைந்துள்ளனர்.

இந்நிலையில் முதல் நாளான இன்று(ஜனவரி 31) பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன் நடைபெற்றுள்ளது. இதில் அனிதா, வனிதா, சினேகன், பாலாஜி முருகதாஸ், ஜூலி உள்ளிட்டோரை பெரும்பாலான போட்டியாளர்கள் குறிப்பிட்ட காரணங்களை கூறி நாமினேட் செய்யும் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெண்டாகும் அந்த ப்ரோமோ வீடியோ இதோ...