சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியாக திகழும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ளது.

இதுவரை நடைபெற்ற பிக் பாஸ் சீசன்களிலிருந்து போட்டியாளர்கள் களமிறங்கும் இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் தொடக்க விழா வருகிற ஜனவரி 30ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு கோலாகலமாக நடைபெறவுள்ளது.

முன்னதாக 106 நாட்கள் நடைபெற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைகின்றது. அனேக மக்களின் அபிமானம் பெற்ற ராஜூ ஜெயமோகன் டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை பிரியங்காவும், மூன்றாவது இடத்தை பாவனியும் பிடிக்க நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை அமீர் மற்றும் நிரூப் ஆகியோர் கைப்பற்றினர்.

இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சிக்குப் பிறகு பிக் பாஸ் போட்டியாளர்கள் ஆங்காங்கே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தனியார் ஹோட்டலில் டைட்டில் வின்னர் ராஜூ மற்றும் அமீர் குத்தாட்டம் போடும் புதிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. வைரலாகும் அந்த வீடியோ இதோ…