ரசிகர்களின் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய வடிவமாக வருகிறது பிக்பாஸ் OTT எனும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி. வழக்கமாக ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம் ரசிகர்கள் பார்த்து ரசித்த பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி பிக்பாஸ் அல்டிமேட்டில் 24 மணி நேரமும் பார்க்க முடியும்.

நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, வருகிற ஜனவரி 30-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகும் கோலாகலமான தொடக்க விழாவில் 16 போட்டியாளர்கள் களமிறங்கிவுள்ளனர். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இதுவரை நடைபெற்ற பிக் பாஸ் சீசன்களிலிருந்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஹவுஸ் மேட்ஸ்களாக களமிறங்கவுள்ளனர். இதனிடையே தினமொரு போட்டியாளர்களை அறிவிக்கும் விதமாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் புதிய ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில் நேற்று வெளியான ப்ரோமோ வீடியோவில் பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளரான கவிஞர் சினேகன் போட்டியாளராக நுழைவதை உறுதி செய்யும் விதமாக ப்ரோமோ வெளியானது. இந்நிலையில் தற்போது கவிஞர் சினேகன் தொடர்ந்து முதல் சீசனில் விளையாடிய ஜூலி போட்டியாளராக செல்வதை உறுதிப்படுத்தும் புதிய ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் களமிறங்கிய ஜூலி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்ட போதிலும் தொடர்ச்சியாக பல தொலைக்காட்சிகளிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வந்துள்ளார். விடாமுயற்சியோடு முன்னேறி வரும் ஜூலி பிக் பாஸில் கம்பேக்காக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நுழைவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு செல்வதை ஜூலி அறிவிக்கும் ப்ரோமோ இதோ…