ரிலீஸுக்கு ரெடியான ரெட் ஜெயன்ட் மூவீஸின் கலக்கலான அடுத்த  படைப்பு... பிக் பாஸ் கவினின் டாடா பட ஸ்பெஷல் அப்டேட்!

பிக் பாஸ் கவினின் தாதா பட ரிலீஸ் தேதி அறிவிப்பு,bigg boss kavin in dada movie release date announcement | Galatta

அரசியல் மற்றும் சினிமா என மிக நேர்த்தியாக பயணித்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு நடிப்பதிலிருந்து விலகி முழுவதுமாக தன்னை மக்கள் பணியில் ஈடுபடுத்த உள்ளதாக அறிவித்துவிட்டார். இருப்பினும் அவரது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தொடர்ந்து தரமான திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்கு தயாரித்தும் வழங்கியும் வருகிறது.

அந்த வகையில் இந்த 2023 ஆம் ஆண்டை அஜித் குமாரின் துணிவு திரைப்படத்தை வெளியிட்டு பிளாக்பஸ்டர் ஹிட்டோடு வெற்றிகரமாக தொடங்கி இருக்கிறது. அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

இதனிடையே ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் அடுத்த படைப்பாக வருகிறது டாடா. இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் பிக் பாஸ் போட்டியாளரும் பிரபல நடிகருமான கவின் கதாநாயகனாக நடித்துள்ள டாடா திரைப்படத்தில், அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்க, இயக்குனர் கே.பாக்கியராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் ஆகியோர் டாடா படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஒலிம்பியா மூவீஸ் சார்பில் S.அம்பேத் குமார் தயாரித்துள்ள டாடா திரைப்படத்திற்கு எழில் அரசு.K ஒளிப்பதிவில், கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். இந்நிலையில் டாடா திரைப்படம் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…
 

February 10 முதல் :) #Dada @OlympiaMovies @RedGiantMovies_ @thinkmusicindia pic.twitter.com/ypM3eMU4tx

— Kavin (@Kavin_m_0431) January 23, 2023

போட்றா வெடிய! பாக்ஸ் ஆபீஸின் ஆட்டநாயகன் தளபதி விஜய் தான்... வாரிசு பட வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

போட்றா வெடிய! பாக்ஸ் ஆபீஸின் ஆட்டநாயகன் தளபதி விஜய் தான்... வாரிசு பட வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

LCUல் வருவதனால்... விஜய் - லோகேஷ் கனகராஜின் தளபதி 67 பட வேற லெவல் அப்டேட் கொடுத்த ஃபக்த் பாஸில்! விவரம் இதோ
சினிமா

LCUல் வருவதனால்... விஜய் - லோகேஷ் கனகராஜின் தளபதி 67 பட வேற லெவல் அப்டேட் கொடுத்த ஃபக்த் பாஸில்! விவரம் இதோ

சந்திப் கிஷன் - விஜய் சேதுபதி - கௌதம் வாசுதேவ் மேனனின் அதிரடியான மைக்கேல்... பக்கா ACTION PACKED ட்ரெய்லர் இதோ!
சினிமா

சந்திப் கிஷன் - விஜய் சேதுபதி - கௌதம் வாசுதேவ் மேனனின் அதிரடியான மைக்கேல்... பக்கா ACTION PACKED ட்ரெய்லர் இதோ!