சூப்பர் ஹிட் இயக்குனருடன் மீண்டும் இணைந்த சந்தானம் - கவுண்டமணியின் ஃபேவரட் வசனத்தில் டைட்டில்! செம்ம அறிவிப்பு இதோ

சந்தானத்தின் அடுத்த படமாக தயாராகும் வடக்குப்பட்டி ராமசாமி,santhanam next big movie titled vadakkupatti ramasamy with karthik yogi | Galatta

மக்கள் விரும்பும் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக நகைச்சுவையை முன்னிறுத்தும் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் காமெடியில் கலக்கி வருகிறார். அந்த வகையில் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனரும் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களின் வசனகர்த்தாவுமான இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடித்து வெளிவந்த குலுகுலு திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

முன்னதாக பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் தனது 15வது திரைப்படமாக சந்தானம் நடித்துள்ள கிக் திரைப்படம் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் கதாநாயகனாக நடிக்கும் AK62 படத்தில் சந்தானம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேபோல் இயக்குனர் சுந்தர்.சி-யின் சூப்பர் ஹிட் ஹாரர் காமெடி சீரிஸாக வெளிவரும் அரண்மனை சீரிஸ் படங்களின் நான்காவது பாடமாக தயாராகும் அரண்மனை 4 படத்தில் சந்தானம் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க உள்ளதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெகு விரைவில் வெளிவரவுள்ளதாக தெரிகிறது.

இந்த வரிசையில் சந்தானம் நடிப்பில் அடுத்த பெரிய திரைப்படமாக தயாராகும் புதிய படத்தை தெலுங்கில் ஓ பேபி & கார்த்திகேயா 2 போன்ற படங்களை தயாரித்த பீப்பிள் மீடியா ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக சந்தானம் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனா டிக்கிலோனா படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி மீண்டும் சந்தானத்துடன் இணைந்துள்ள இந்த படத்திற்கு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அவர்களின் ஃபேவரட் வசனங்களில் ஒன்றான வடக்குப்பட்டி ராமசாமி என பெயரிடப்பட்டுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தீபக் ஒளிப்பதிவில், T.சிவானந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்யும் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்திற்கு ஜான் ரோல்டன் இசையமைக்கிறார்.சந்தானத்தின் அடுத்த பெரிய திரைப்படமாக தயாராகும் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் டைட்டில் போஸ்டர் இதோ…
 

Unveiling the title look of #SantasBiggie🤩@iamsanthanam in & as #VadakkupattiRamasamy 🔥🎉

A film by @karthikyogitw
Produced by @peoplemediafcy @vishwaprasadtg @vivekkuchibotla @nuttypillai @negativespace04 @EditorShivaN @RSeanRoldan #Rajesh pic.twitter.com/ucz7PSE1Ks

— People Media Factory (@peoplemediafcy) January 23, 2023

LCUல் வருவதனால்... விஜய் - லோகேஷ் கனகராஜின் தளபதி 67 பட வேற லெவல் அப்டேட் கொடுத்த ஃபக்த் பாஸில்! விவரம் இதோ
சினிமா

LCUல் வருவதனால்... விஜய் - லோகேஷ் கனகராஜின் தளபதி 67 பட வேற லெவல் அப்டேட் கொடுத்த ஃபக்த் பாஸில்! விவரம் இதோ

சந்திப் கிஷன் - விஜய் சேதுபதி - கௌதம் வாசுதேவ் மேனனின் அதிரடியான மைக்கேல்... பக்கா ACTION PACKED ட்ரெய்லர் இதோ!
சினிமா

சந்திப் கிஷன் - விஜய் சேதுபதி - கௌதம் வாசுதேவ் மேனனின் அதிரடியான மைக்கேல்... பக்கா ACTION PACKED ட்ரெய்லர் இதோ!

கோலாகலமாக நிறைவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6... டைட்டிலை எட்டிப்பிடித்த அசீம் - விக்ரமன் RUNNER UP! விவரம் உள்ளே
சினிமா

கோலாகலமாக நிறைவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6... டைட்டிலை எட்டிப்பிடித்த அசீம் - விக்ரமன் RUNNER UP! விவரம் உள்ளே