போட்றா வெடிய! பாக்ஸ் ஆபீஸின் ஆட்டநாயகன் தளபதி விஜய் தான்... வாரிசு பட வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் 250 கோடி வசூலித்துள்ளது,thalapathy vijay in varisu movie collected 250 crores worldwide | Galatta

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் சாம்ராஜத்தை கொண்ட பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தியாகவும் திகழும் தளபதி விஜய் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு ரிலீஸானது. முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு (தெலுங்கில் வாரசடு) படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைத்துள்ளார். 

தளபதி விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, SJ.சூர்யா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா க்ரிஷ், VTV கணேஷ், சதீஷ், பிக்பாஸ் சம்யுகதா உள்ளிட்டோர் வாரிசு படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் வெளியிட கடந்த ஜனவரி 11ம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸான வாரிசு திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

முன்னதாக பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த போதும் அனைத்து வயதினரும் ரசிக்கும்படியான பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக வாரிசு திரைப்படத்தை மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் வாரிசு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி 11 நாட்களில் 250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…
 

Podra bgm ah 🔥#MegaBlockbusterVarisu collects 250Crs+ worldwide in 11 days nanba 🤩#Thalapathy @actorvijay sir @directorvamshi @SVC_official @MusicThaman @iamRashmika @TSeries #Varisu #VarisuPongal‌#VarisuHits250Crs pic.twitter.com/I1UJgRIGoJ

— Sri Venkateswara Creations (@SVC_official) January 23, 2023

கோலாகலமாக நிறைவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6... டைட்டிலை எட்டிப்பிடித்த அசீம் - விக்ரமன் RUNNER UP! விவரம் உள்ளே
சினிமா

கோலாகலமாக நிறைவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6... டைட்டிலை எட்டிப்பிடித்த அசீம் - விக்ரமன் RUNNER UP! விவரம் உள்ளே

ஒரே நாளில் ரிலீஸாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 2 படங்கள்... ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் அட்டகாசமான அறிவிப்பு இதோ!
சினிமா

ஒரே நாளில் ரிலீஸாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 2 படங்கள்... ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் அட்டகாசமான அறிவிப்பு இதோ!

இந்த கேரக்டரில் நடித்த போது ஒவ்வொரு நாளும் வெறுத்திருக்கிறேன்... மனம் திறந்த RJபாலாஜியின் கலகலப்பான பேட்டி இதோ!
சினிமா

இந்த கேரக்டரில் நடித்த போது ஒவ்வொரு நாளும் வெறுத்திருக்கிறேன்... மனம் திறந்த RJபாலாஜியின் கலகலப்பான பேட்டி இதோ!