சந்திப் கிஷன் - விஜய் சேதுபதி - கௌதம் வாசுதேவ் மேனனின் அதிரடியான மைக்கேல்... பக்கா ACTION PACKED ட்ரெய்லர் இதோ!

மைக்கேல் திரைப்படத்தின் அதிரடியான ட்ரெய்லர் வெளியீடு,sundeep kishan in michael movie trailer out now | Galatta

தற்போது இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல் திரைப்படமாக வந்த மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப் பிரபலமடைந்தவர் நடிகர் சந்திப் கிஷன். முன்னதாக தனது முதல் தமிழ் படமாக யாருடா மகேஷ் படத்தில் நடித்த சந்திப் கிஷன் மாநகரம் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்தார்.

அந்த வகையில் நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கசடதபற உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் சந்தீப் கிஷன் நடித்துள்ளார். அடுத்ததாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அதிரடியான பீரியட் படமாக தயாராகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் நடித்து வருகிறார்.

முன்னதாக புரியாத புதிர் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் மைக்கேல். இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், வரலக்ஷ்மி சரத்குமார், திவ்யான்ஷா கௌஷிக் மற்றும் வருண் சந்தேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

கிரண் கௌசிக் ஒளிப்பதிவில், R.சத்ய நாராயணன் படத்தொகுப்பு செய்யும் மைக்கேல் படத்திற்கு சாம்.CS இசையமைத்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் கரண் C ப்ரொடக்சன் இணைந்து தயாரிக்க அதிரடி ஆக்ஷன் ப்ளாக் திரைப்படமாக தயாராகியுள்ள மைக்கேல் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவரவுள்ளது. 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வழங்கும் மைக்கேல் திரைப்படம் வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்நிலையில் மைக்கேல் திரைப்படத்தின் அதிரடியான ட்ரெய்லர் தற்போது வெளியானது. சமூகவலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள மைக்கேல் திரைப்படத்தின் ACTION PACKED ட்ரெய்லர் இதோ…
 

இந்த கேரக்டரில் நடித்த போது ஒவ்வொரு நாளும் வெறுத்திருக்கிறேன்... மனம் திறந்த RJபாலாஜியின் கலகலப்பான பேட்டி இதோ!
சினிமா

இந்த கேரக்டரில் நடித்த போது ஒவ்வொரு நாளும் வெறுத்திருக்கிறேன்... மனம் திறந்த RJபாலாஜியின் கலகலப்பான பேட்டி இதோ!

மறக்க முடியாத நாள்… பெற்றோர்கள் ஆகப்போகும் அட்லீ-பிரியாவின் வீட்டு விசேஷம்-ட்ரெண்டாகும் புதிய புகைப்படங்கள்!
சினிமா

மறக்க முடியாத நாள்… பெற்றோர்கள் ஆகப்போகும் அட்லீ-பிரியாவின் வீட்டு விசேஷம்-ட்ரெண்டாகும் புதிய புகைப்படங்கள்!

ஜவான் படத்தில் ஷாருக்கானின் நடிப்பு குறித்து முதல் முறை மனம் திறந்த அட்லீ! அதிரடி பதிவு இதோ
சினிமா

ஜவான் படத்தில் ஷாருக்கானின் நடிப்பு குறித்து முதல் முறை மனம் திறந்த அட்லீ! அதிரடி பதிவு இதோ