விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இந்த தொடரில் அருண் ஹீரோவாக நடித்து வருகிறார்.இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த ரோஷ்ணி சில மாதங்களுக்கு முன் விலக அவருக்கு பதிலாக வினுஷா தேவி நடித்து அசத்தி வருகிறார்.புதிய எபிசோடுகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்த தொடரில் இரண்டாவது ஹீரோவாக நடித்து பிரபலமானவர் அகிலன்.இந்த தொடரில் நடித்து வரும்போதே சில படவாய்ப்புகள் வர , சீரியலில் இருந்து விலகினார் அகிலன் இவருக்கு பதிலாக தற்போது பிரபல நடிகர் நடித்து வருகிறார்.சமீபத்தில் வெளியான விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் அகிலன்.

சில மாதங்களுக்கு முன் பாரதி கண்ணம்மாவில் தனக்கு ஜோடியாக நடித்த கண்மணியுடன் இணைந்து நடித்த ஹோரா ஆல்பம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தவிர பீட்சா 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார் அகிலன்.

தற்போது தெலுங்கு படமொன்றில் ஹீரோவாக நடிக்கும் செய்தியை சில புகைப்படங்களுடன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார் அகிலன்.இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.