கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச்சுவர் எழுப்பப்படுகிறது என்றும், கர்நாடகாவில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது” என்றும், மநீம தலைவர் கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அரசுக் கல்லூரி அனுமதி மறுத்த விவகாரம், இந்தியாவையும் தாண்டி உலக அளவில் கடும் அதிர்ச்சிகைளையும், பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக நேற்றைய தினம் கர்நாடகா மாநிலத்தில் இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில், போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு தடியடி நடத்தினர்.

அத்துடன், மாணவர்கள் மத்தியில் கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைத்ததுடன், அந்த வழியாக சென்ற பல மாணவர்களையும் போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக, அங்குள்ள 3 தாலுகாக்களில் 144 தடை உத்தரவும் அதிரடியாக பிறப்பிக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக தான், கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்த உணர்ந்த அந்த மாநில அரசு, “ பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளித்து” அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்றைய தினம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

என்றாலும், கர்நாடகா மாநிலத்தில் நடக்கும் இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிரான பிரச்சனையானது உலக அளவில் பரவி, துபாய் இளவரசி வரை, கடும் கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு தற்போது வளர்ந்து நிற்கிறது.

அதே நேரத்தில், “கர்நாடகாவில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது” என்று, பலரும் நேற்றைய தினம் பதறிப்போய் இணையத்தில் பலரும் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் தான், “கர்நாடகாவில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது”  என்று, மநீம தலைவர் கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

இது தொடர்பாக மநீம தலைவர் கமல்ஹாசன் விடுத்துள்ள எச்சரிக்கை பதிவில், “கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது” என்று, கவலைத் தெரிவித்து உள்ளார். 

“கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது” என்றும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பகிரங்கமாகவே குற்றம்சாட்டி உள்ளார். 

குறிப்பாக, “ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது, தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது” என்றும், கமல்ஹாசன் எச்சரிக்கை உணர்வுடன் தெரிவித்து உள்ளார்.

“முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது” என்றும், கமல்ஹாசன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார்.