விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று பாக்கியலக்ஷ்மி.ஒரு குடும்பத்தலைவியின் கதை என்பதால் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் இன்ஸ்டன்ட் ஹிட் அடித்தது.சுசித்ரா ஷெட்டி இந்த தொடரின் முதன்மை வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.இவருக்கு ஜோடியாக சதிஷ்குமார் நடித்துள்ளார்.

விஷால்,ரித்திகா,விகாஷ்,திவ்யா கணேஷ்,நேஹா மேனன்,கம்பம் மீனா,ரேஷ்மா பசுபுலேட்டி போன்ற பல நட்சத்திரங்கள் இணைந்து இந்த தொடரில் நடித்து அசத்தி வருகின்றனர்.இந்த தொடருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

இந்த தொடர் குறித்து கோபி கதாபாத்திரம் குறித்தும் மீம்களை பகிர்ந்தும் ரசிகர்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர்.இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரில் நடித்து வரும் நடிகர்,நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலங்களாக மாறியுள்ளனர்,

பல தீருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி பெரிய வரவேற்பை பெற்று வரும் இந்த தொடர் 500 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது.இதனை இந்த சீரியல் ரசிகர்கள் கோலாகலாம்க கொண்டாடி வருகின்றனர்.