சின்னத்திரையில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஆர்யன் என்னும் வேலு லக்ஷ்மணன்.பிரபல மாடல் ஆக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கிய இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் ஆர்யன்.

அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தார்,இந்த தொடரில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நடிகராக மாறினார் ஆர்யன்.இந்த தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார் ஆர்யன்.

ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.தற்போது இவர் ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பை தொடங்கவுள்ள மீனட்சி பொண்ணுங்க சீரியலில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்த ப்ரோமோ வீடீயோவையும் ஜீ தமிழ் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.பிரபல சினிமா நடிகை அர்ச்சனா இந்த தொடரின் முன்னணி வேடத்தில் நடிக்கிறார்.இவருடன் இணைந்து ஹீரோயின்களாக மோக்ஷிதா,காயத்ரி யுவராஜ்,ப்ரணிகா தக்ஷு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.