சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியாகி மெகாஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி.இயக்குனர் பி வாசு இயக்கிய இந்த படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.ரஜினியுடன் இணைந்து பிரபு,ஜோதிகா,நயன்தாரா,வடிவேலு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது..இந்த படத்தினையும் இயக்குனர் பி வாசு இயக்குகிறார்.பிரபல டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.லைகா புரொடக்ஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.

இந்த படத்தில் வைகைப்புயல் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.பாகுபலி,RRR உள்ளிட்ட படங்களுக்கு  கீரவாணி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் மைசூரில் தொடங்கியுள்ளது.

ராதிகா சரத்குமார்,ரவி மரியா,சம்பிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த பூஜையில் கலந்துகொண்டுள்ளனர்.படத்தின் ஹீரோயின் மற்றும் பிற நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பூஜை புகைப்படம் வைரலாகி வருகிறது.