ஹாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். இவரது இயக்கத்தில் வெளிவந்த அட்வென்சர்- ஃபேண்டசி திரைப்படங்கள் அனைத்தும் உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுவது வழக்கம்.குறிப்பாக ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த டெர்மினேட்டர் ஏலியன்ஸ் டைட்டானிக் உள்ளிட்ட திரைப்படங்கள் இன்றளவும் தொடர்ந்து ரசித்துப் பார்க்கப்படும் திரைப்படங்களாக உள்ளன. 

அந்த வகையில் ஜேம்ஸ் கேமரூனின் படைப்புகளில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ரசிகர்களை பிரம்மிப்பு உள்ளாக்கிய படம் அவதார். 2009ஆம் ஆண்டு வெளிவந்த அவதார் திரைப்படத்தின் தாக்கம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குறையவில்லை அவதார் திரைப்படத்தின் 2-ம் பாகத்திற்காக பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஐந்து பாகங்களாக தயாராக உள்ள அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான அவதார்-தி வே ஆஃப் வாட்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட VFX பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அவதார்-தி வே ஆஃப் வாட்டர் (அவதார் 2) திரைப்படம் வருகிற டிசம்பர் 16ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் 160 மொழிகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3டி தொழில்நுட்பத்தில் ரிலீசாகும் அவதார்-தி வே ஆஃப் வாட்டர் திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் சினிமா ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து டீசர்-டிரைலர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.