தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராகவும் சிறந்த நடிகையாகவும் திகழும் நடிகை காயத்ரி ரேணிகுண்டா படத்தின் இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் வெளிவந்த 18வயசு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் திரை உலகில் கதாநாயகியாகவும் முக்கிய வேடங்களிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்த நடிகை காயத்ரி, தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், துக்ளக் தர்பார், மாமனிதன் என பல படங்களில் நடித்துள்ளார்

முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்திலும் முக்கிய வேடத்தில் காயத்ரி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தற்போது நடிகை காயத்ரி மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமாகிறார். பிரபல மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடிக்கும் நா தான் கேஸ் கொடு படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார் காயத்ரி.

குஞ்சாக்கோ போபன் புரொடக்ஷன்ஸ், உதயா பிக்சர்ஸ் மற்றும் சந்தோஷ்.டி.குருவிலா இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தை இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவல் எழுதி இயக்கியுள்ளார். இந்நிலையில் தனது முதல் மலையாளப் படத்தை அறிமுகம் செய்யும் வகையில் நடிகை காயத்ரி நா தான் கேஸ் கொடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்துள்ளார். அந்த போஸ்டர் இதோ…