தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை சமந்தா இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இன்று (ஏப்ரல் 28ஆம் தேதி) உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை சமந்தா தற்போது ஹாலிவுட்டிலும் களமிறங்கியுள்ளார். Arrangements of Love எனும் நாவலை தழுவி  இயக்குனர் பிலிப் ஜான் இயக்கத்தில் உருவாகும் புதிய ஆங்கில படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

முன்னதாக இயக்குனர்கள் ஹரி ஷங்கர் மற்றும் ஹரிஷ் நாராயண் இணைந்து இயக்கும் யசோதா படத்திலும் நடித்து வருகிறார். சயின்ஸ் பிக்சன் திரில்லர் படமாக உருவாகும் யசோதா தமிழ், தெலுங்கு உட்பட இந்தியாவின் 5 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நடிகை சமந்தா நடிப்பில் மற்றொரு PAN INDIA திரைப்படமாக தயாராகியிருக்கும் படம் சாகுந்தலம்.

இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் புராண கதாபாத்திரமான சகுந்தலா கதாபாத்திரத்தை மையமாக வைத்து தயாராகியிருக்கும் சாகுந்தலம் திரைப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து அதிதி பாலன், தேவ் மோகன், அனன்யா நகலா, பிரகாஷ்ராஜ், மோகன்பாபு, கௌதமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக சாகுந்தலம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் சாகுந்தலம் படத்தின் டப்பிங் பணிகளை நடிகை சமந்தா நிறைவு செய்தார். இந்நிலையில் நடிகை சமந்தாவின் பிறந்த நாளான இன்று ஏப்ரல் 28'ம் தேதி சமந்தாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சாகுந்தலம் படக்குழுவினர் சமந்தாவின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் இதோ…