அதர்வா - சரத்குமார் - ரஹ்மானின் அட்டகாசமான நிறங்கள் மூன்று... ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ட்ரெய்லர் இதோ!

அதர்வாவின் நிறங்கள் மூன்று பட ட்ரெய்லர் வெளியீடு,Atharvaa sarathkumar rahman in nirangal moondru movie trailer out now | Galatta

தமிழ் சினிமாவின் மிக குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் கார்த்திக் நரேன் தனது 21 வது வயதிலேயே இளம் இயக்குனராக முத்திரை பதித்தவர். பிரபலமான பெரிய இயக்குனர்கள் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை என்றாலும் தனது தனி திறமையால் இயக்குனராக களம் கண்ட கார்த்திக் நரேன் இயக்கிய முதல் திரைப்படம் துருவங்கள் பதினாறு. நடிகர் ரஹ்மான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த துருவங்கள் பதினாறு திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்தது. இயக்குனர் கார்த்திக் நரேன் அவர்களின் தந்தை திரு.நரேன் அவர்கள் நைட் நாஸ்டாலஜியா ஃபிலிமோடைன்மண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்த துருவங்கள் பதினாறு திரைப்படம் விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் திரைப்படமாக வெளிவந்த துருவங்கள் பதினாறு திரைப்படம் ரிலீஸுக்கு பிறகு பல நல்ல விமர்சனங்களை பெற்று பிறகு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.

இதனை அடுத்து தனது இரண்டாவது திரைப்படமாக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் திரைப்படம் நீண்ட காலமாக ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இதனிடையே நடிகர் அருண் விஜய் உடன் இணைந்த இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவந்த மாஃபியா சேப்டர் 1 திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் நேரடியாக நெட்ஃபிலிக்ஸில் வந்த நவரசா ஆன்தாலாஜி படத்தில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவந்த ப்ராஜெக்ட் அக்னி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. நடிகர்கள் அரவிந்த் சுவாமி மற்றும் பிரசன்னா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் வெளிவந்த ப்ராஜெக்ட் அக்னி நவரசாவின் 9 எபிசோடுகளில் பலருக்கும் ஃபேவரட் எபிசோடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மாறன். நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்க உருவான மாறன் திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆனது. இயக்குனர் கார்த்திக் நரேனின் கம்பேக் திரைப்படமாக இருக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாறன் திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. இந்த நிலையில் தற்போது இயக்குனர் கார்த்திக் ரரேனின் இயக்கத்தில் அடுத்த சுவாரசியமான திரைப்படமாக தயாராகி இருக்கிறது நிறங்கள் மூன்று திரைப்படம். 

அதர்வா, சரத்குமார் மற்றும் ரஹ்மான் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிறங்கள் மூன்று திரைப்படத்தில் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மற்றும் அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள நிறங்கள் மூன்று திரைப்படத்திற்கு டிஜோ டாமி ஒளிப்பதிவில் ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்ய, ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.  விரைவில் நிறங்கள் மூன்று திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வித்தியாசமான ஹைப்பர் லிங்க் திரைப்படமாக தயாராகி இருக்கும் நிறங்கள் மூன்று திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த நிறங்கள் மூன்று திரைப்படத்தின் ட்ரெய்லர் இதோ…
 

வெற்றிமாறன் - விஜய் சேதுபதி - சூரியின் விடுதலை... ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த மிரட்டலான அறிவிப்பு இதோ!
சினிமா

வெற்றிமாறன் - விஜய் சேதுபதி - சூரியின் விடுதலை... ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த மிரட்டலான அறிவிப்பு இதோ!

லியோ படத்தில் தளபதி விஜய் உடன் மாஸ் சண்டை காட்சி... முதல் முதலாக ரகசியத்தை போட்டுடைத்த மிஷ்கின்!
சினிமா

லியோ படத்தில் தளபதி விஜய் உடன் மாஸ் சண்டை காட்சி... முதல் முதலாக ரகசியத்தை போட்டுடைத்த மிஷ்கின்!

சினிமா

"பாயின் சம்பவம்!"- சிலம்பரசன்TRன் பத்து தல பட டீசரின் அதிரடியான முதல் மாஸ் விமர்சனம் இதோ!