கடந்த 2017 ல் கன்னடத்தில் சிவராஜ் குமார் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் அடித்த திரைப்படம் ‘மஃப்டி’. அட்டகாசமான அதிரடி திரில்லர் திரைப்படமான ‘மஃப்டி’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்வதாகவும் அப்படத்தில் கதாநாயகனாக சிலம்பரசன் TR நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது. அதன்படி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. ஓபெலி N கிருஷ்ணன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘மஃப்டி’ திரைப்படத்தின் ரீமேக் ‘பத்து தல’ என்று பெயரிடப்பட்டது. அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த பத்து தல திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் தயாரித்தது. இந்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
முன்னதாக சிம்பு நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.அதனை தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இப்படத்திற்கு ஃபரூக். J.பாஷா ஒளிப்பதிவு செய்ய பிரவீன் KL படத்தொகுப்பு செய்கிறார். மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே ‘நம்ம சத்தம்’ என்ற முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது.
வரும் மார்ச் 30 ம் தேதி வெளியாகவிருக்கும் பத்து தல திரைப்படத்தையடுத்து தற்போது படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. கௌதம் கார்த்திக், கலையரசன், டீஜே அருணாச்சலம் ஆகியோர் துப்பாக்கியில் மிரட்ட ஒருபுறம் பிரியா பவானி ஷங்கர், கௌதம் வாசுதேவ் மேனன் சுற்றி வளைக்க மணல் மாபியா அதிபதியாய் குமரி கண்டதை ஆளும் ஏ.ஜி.ராவணனாக சிலம்பரசன் கருப்பு உடையில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் டீசர் இணையத்தை அதகளப்படுத்தி வருகிறது.
பின்னணி இசையில் சிலிர்க்க வைக்கிறார் ஏ ஆர் ரஹ்மான். முழுக்க முழுக்க ரசிகர்களீன் மனதை கவரும் அளவு அட்டகாசமாக உருவாகியிருக்கும் பத்து தல டீசர் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அட்டகாசமான உருவாகியுள்ள பத்து தல படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி ஷங்கர், கலையரசன், அனு சித்தாரா மற்றும் டிஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.