இந்திய சினிமாவே வியந்து பார்த்த திரை ஜாம்பவானான பாலு மகேந்திரா அவர்களின் பள்ளியின் இருந்து சிறந்த மாணவனாக தனது ஒவ்வொரு திரைப்படங்களிலும் நிரூபித்து வரும் இயக்குனர் வெற்றிமாறன் தனது முதல் திரைப்படமான பொல்லாதவன் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். தொடர்ந்து தனது 2வது திரைப்படமாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மீண்டும் நடிக்க வெளிவந்த ஆடுகளம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு ஆறு தேசிய விருதுகள் ஐந்து ஃபிலிம் ஃபேர் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை வென்று குவித்தது. இதனை அடுத்து வெற்றிமாறன் இயக்கிய விசாரணை திரைப்படம் உலக அளவில் பெரும் கவனத்தை பெற்றது. தேசிய விருது உட்பட உலக அரங்கில் பல்வேறு விருதுகளை விசாரணை படம் கைப்பற்றியது.
பின்னர் மீண்டும் அடுத்தடுத்து தனுஷ் உடன் வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய திரைப்படங்களில் இணைந்த இயக்குனர் வெற்றிமாறன் அசுரன் படத்திற்காக மீண்டும் தேசிய விருது பெற்றார். அசுரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நேரடியாக Netflix-ல் வெளிவந்த பாவக்கதைகள் எனும் ஆந்தாலாஜி படத்தில் ஓர் இரவு எனும் எபிசோடை வெற்றிமாறன் இயக்கினார். அடுத்ததாக நடிகர் சூர்யாவுடன் முதல் முறையாக இணையும் இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை இயக்க இருக்கிறார். கலைப்புலி.S.தாணு அவர்களின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரிசையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்து வெளிவர தயாராகி வரும் திரைப்படம் விடுதலை. பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளனர். RS இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி ப்ரொடக்ஷன் வழங்கும், விடுதலை திரைப்படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், R.ராமர் படத்தொகுப்பு செய்ய, பீட்டர் ஹெய்ன் மற்றும் ஸ்டண் சிவா ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ளது.
அந்த வகையில் விடுதலை படத்தின் முதல் பாகத்தை இந்த மார்ச் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முன்னதாக சமீபத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் நடிகர் தனுஷ் பாட விடுதலை திரைப்படத்தின் முதல் பாடலாக ஒன்னோட நடந்தா எனும் பாடல் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், விடுதலை படத்தின் மற்ற பாடல்களுக்காகவும் ட்ரெய்லருக்காகவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் வருகிற மார்ச் 8ம் தேதி விடுதலை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்படும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பு இதோ…
Director #VetriMaaran ’s #ViduthalaiPart1 Audio & Trailer launch on March 8️⃣
— RS Infotainment (@rsinfotainment) March 3, 2023
🎼 @ilaiyaraaja
Coming soon in theatres!@VijaySethuOffl @sooriofficial @BhavaniSre @VelrajR @DirRajivMenon @menongautham @jacki_art @GrassRootFilmCo @RedGiantMovies_ @mani_rsinfo @SonyMusicSouth pic.twitter.com/i3kf5gNnIh