சர்தார் தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ் - ஹரிஷ் கல்யாண்... பூஜையுடன் தொடங்கிய புதிய படம்! விவரம் உள்ளே

அட்டகத்தி தினேஷ்-ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து படம் பூஜையுடன் ஆரம்பம்,harish kalyan attakathi dinesh in lubber pandhu movie starts with pooja | Galatta

தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ப்ரண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான சிங்கம் 2, திரிஷாவின் மோகினி, கார்த்தியின் தேவ் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளது. முன்னதாக கடந்த 2022ம் ஆண்டில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த சர்தார் திரைப்படம் தீபாவளி வெளியீடாக ரிலீஸாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இயக்குனர் PS.மித்ரன் இயக்கத்தில் மிரட்டலான இரட்டை வேடங்களில் நடிகர் கார்த்தி நடித்த சர்தார் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்தது. அதிரடியான ஸ்பை திரில்லர் திரைப்படமாக அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த கார்த்தியின் சர்தார் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் PS.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் 2 திரைப்படம் குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பிரபல மலையாள இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில், தனது வழக்கமான திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு முழுக்க முழுக்க சீரியஸான கதாபாத்திரத்தில் நடிகர் RJ. பாலாஜி கதாநாயகனாக நடிக்க ப்ரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த ரன் பேபி ரன் திரைப்படம் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரில்லர் திரைப்படமாக வெளிவந்துள்ள ரன் பேபி ரன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் ஜியன் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தையும் தயாரிக்க உள்ளதாக ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக இயக்குனர் PS.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தை தயாரிக்க இருக்கும் ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து சூப்பர் ஹிட்டான FIR திரைப்படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் புதிய திரைப்படத்தையும் தயாரிக்க உள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. அதேபோல் சமீபத்தில் நடிகர் SJ.சூர்யா நடிப்பில் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்த வதந்தி வெப் சீரிஸின் இயக்குனரும், விஜய் ஆண்டனி மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து நடித்த கொலைகாரன் திரைப்படத்தின் இயக்குனருமான ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கும் புதிய படத்தையும் ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக சில வாரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் தண்டட்டி திரைப்படத்தையும் ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த வரிசையில் அடுத்ததாக ப்ரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் லப்பர் பந்து. இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களான ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் கதையின் நாயகர்களாக நடிக்கும் லப்பர் பந்து திரைப்படம் ரப்பர் பந்து கிரிக்கெட்டை மையப்படுத்திய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல மலையாள நடிகை சுவாஸிக்கா & வதந்தி வெப்சீரிஸில் வெலோனியாக மக்களின் மனதை கவர்ந்த நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் லப்பர் பந்து படத்தில் நடிகர் பால சரவணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் லப்பர் பந்து திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்நிலையில் தற்போது லப்பர் பந்து திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் விரைவில் வெளிவருமான எதிர்பார்க்கப்படுகிறது. லப்பர் பந்து திரைப்படத்தின் படப்பூஜை புகைப்படங்கள் இதோ…
 

Here are the pictures from the pooja of #LubberPandhu which took place today.

The @iamharishkalyan #AttakathiDinesh starrer goes on floors!@tamizh018 @lakku76 @venkatavmedia @isanjkayy @bala_actor @rseanroldan @DKP_DOP @ganesh_madan pic.twitter.com/29n4742nfU

— Prince Pictures (@Prince_Pictures) March 3, 2023

லியோ படத்தில் தளபதி விஜய் உடன் மாஸ் சண்டை காட்சி... முதல் முதலாக ரகசியத்தை போட்டுடைத்த மிஷ்கின்!
சினிமா

லியோ படத்தில் தளபதி விஜய் உடன் மாஸ் சண்டை காட்சி... முதல் முதலாக ரகசியத்தை போட்டுடைத்த மிஷ்கின்!

சினிமா

"பாயின் சம்பவம்!"- சிலம்பரசன்TRன் பத்து தல பட டீசரின் அதிரடியான முதல் மாஸ் விமர்சனம் இதோ!

வெங்கட் பிரபுவின் வேற லெவல் போலீஸ் படம்... மாஸாக வந்த மிரட்டலான புது கேரக்டர் GLIMPSE இதோ!
சினிமா

வெங்கட் பிரபுவின் வேற லெவல் போலீஸ் படம்... மாஸாக வந்த மிரட்டலான புது கேரக்டர் GLIMPSE இதோ!